தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சரவெடி தயாரிக்க, வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்சநீதிமன்ற உத்தரவுக்கு சிஐடியு வரவேற்பு

1 Oct 2026, 10:49 pm
சரவெடி தயாரிக்க, வெடிக்க விதிக்கப்பட்ட தடையை  நீக்கிய உச்சநீதிமன்ற உத்தரவுக்கு சிஐடியு வரவேற்பு

சரவெடி தயாரிக்க, வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்சநீதிமன்ற உத்தரவுக்கு சிஐடியு வரவேற்பு

விருதுநகர், அக்.1-சரவெடி தயாரிப்பதற்கும் வெடிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சிஐடியு வரவேற்றுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட் டித் தொழிலாளர் சங்கம் சார்பில் வீதிகளிலும் நீதிமன்றத்திலும் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.என்.தேவா, பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:விருதுநகர் மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இத்தொழிலில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு உற்பத்தியில் சரவெடி முக்கியமானதாகும். 100 வாலா முதல் 25 ஆயிரம் வாலா வரை சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. திருவிழாக் கள், வெற்றிக் கொண்டாட்டங்கள் உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. மொத்த பட் டாசு உற்பத்தியில் சுமார் 40 சதவிகிதம் பல்வேறு வகையான சரவெடிகள் தயாரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு (பச்சை உப்பு) தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சரவெடி உற்பத்திக் கும் தடை ஏற்பட்டது. இதனால் பட்டாசுத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்

பும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.இதனை எதிர்த்து விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டித் தொழிலாளர் சங்கம் சார்பில் மறியல், கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், மனிதச் சங்கிலி, கருப்புக்கொடி போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த 2018 டிச.21-ல் 50 ஆயிரம் தொழிலாளர்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டது. மேலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகளை வலியுறுத்தி சங்கம் சார்பில் உச்சநீதிமன்ற வழக்கிலும் இணைந்து சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சரவெடி உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரை திரும்பப் பெறப்பட்டதுடன், சரவெடியை அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சரவெடி தயாரிப்பதற்கும் வெடிப்பதற்கும் தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவு பட்டாசுத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பேரியம் நைட்ரேட்டுக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்க ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.