தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதித்துறை ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அறிவுறுத்தல்

23 Mar 2026, 3:39 pm
நீதித்துறை ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அறிவுறுத்தல்
<p><strong>நீதித்துறை ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அறிவுறுத்தல்</strong></p> <p>பெங்களூரு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஞாயிறன்று நடைபெற்ற, முதலாவது உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், &ldquo;நீதித்துறை ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல் படக் கூடாது&rdquo; என்று கூறினார். &nbsp;மீம்ஸ்களுக்கு வழக்கு நீதித்துறை ஒருபோதும் ஒரு தரப்பிற்கு ஆதர வாகவோ அல்லது எப்போதும் விமர்சனம் செய்பவராகவோ இருக்கக் கூடாது. &nbsp;நீதித்துறை விழிப்புணர்வுடன் கூடிய பாதுகாவ லனாகவே இருக்க வேண்டும். குறிப்பாக சாதா ரண பொதுப் போராட்டங்கள், மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள், ஏன்... சமூக வலை தளங்களில் பகிரப்படும் மீம்ஸ்கள் மற்றும் பதிவு களுக்காகக் கூட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு (எப்ஐஆர்) &nbsp;செய்யப்படு கிறது. இத்தகைய சிறிய விஷ யங்களுக்காகக் கூட விசார ணைகள் நடத்தப்பட்டு, அவை உச்சநீதிமன்றம் வரை கொண்டு வரப்படுகின்றன. இதனால் நீதி மன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படு வதோடு, சிறப்பு விசாரணைக் குழுக்களை அமைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. 7,771 வழக்குகள் தற்போதைய சூழலில், நாட்டின் கடுமை யான சட்டங்களான பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் சட்டவிரோத நடவடிக்கை கள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகியவை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மார்ச் 2025 வரை சுமார் 7,771 அமலாக்கத்துறை தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. இத்தகைய கடுமையான சட்டங்கள் சாதாரண விவகாரங்களில் பயன்படுத்தப் படும்போது, தனிமனித சுதந்திரம் பாதிக்கப் படுகிறது. ஒரு வளர்ந்த இந்தியாவில் (Viksit Bharat), மாற்றுக் கருத்துக்களுக்கும் விவா தங்களுக்கும் அதிக இடம் இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கூறுவது குற்றமாக் கப்படக் கூடாது&rdquo; என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கைகளை உயர்த்தி அழுத்த மாக வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.