முந்தய பக்கம்

மதமாற்றத் தடைச் சட்டம் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2 Feb 2026, 3:32 pm
மதமாற்றத் தடைச் சட்டம் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
<p><strong>மதமாற்றத் தடைச் சட்டம் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்</strong></p> <p>&ldquo;நேஷனல் கவுன்சில் ஆப் சர்ச்சஸ் இன் இந்தியா&rdquo; என்ற கிறிஸ்தவ அமைப்பு மத மாற்றத் தடைச் சட்டத் திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தது. &nbsp;இந்த மனு திங்க ளன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி &nbsp;ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு &nbsp;வந்தது. கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, &ldquo;மதமாற்றத் தடைச் சட்டங்கள் தனிநபர் சுதந்திரம் மற்றும் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றும் உரி மையைப் (அரசியலமைப்புச் சட்டம் 25) பாதிக்கிறது. சில மாநில சட்டங்கள், மதமாற்றம் குறித்து புகார் அளிக்க தேவையற்ற குழுக்களையும் தூண்டி விடுகிறது&rdquo; என குற்றம்சாட்டினார். &nbsp;இருதரப்பு வாதத்திற்கு பின்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, 4 வாரங்களுக்குள் ஒன்றிய அரசு மற்றும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத், சத்தீஸ்கர், கர்நா டகா, ராஜஸ்தான், ஒடிசா, அருணாச்ச லப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram