தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! எஸ்ஐஆருக்கு தடைகோரி சிபிஎம் - திமுக வழக்கு

11 Nov 2025, 3:41 pm
தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! எஸ்ஐஆருக்கு தடைகோரி சிபிஎம் - திமுக வழக்கு
<p><strong>தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!&nbsp;&nbsp;எஸ்ஐஆருக்கு தடைகோரி சிபிஎம் - திமுக வழக்கு</strong></p> <p>புதுதில்லி, நவ. 11 - தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு &nbsp;தீவிரத் திருத்த பணிகளுக்கு தடைவிதிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் &nbsp;திமுக தொடர்ந்த வழக்கில், இரண்டு வாரங்களில் &nbsp;பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு &nbsp;ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள &nbsp;நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் &nbsp;திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நவம்பர் 4 அன்று தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு &nbsp;இன்னும் சில மாதங்களே உள்ள நிலை யில், திடீரென எஸ்ஐஆர் பணிகளை அறிவித்தி ருப்பது, ஏராளமான குளறுபடிகளை உருவாக் கும் என்பதுடன், தற்போதைய எஸ்ஐஆர் நடை முறையானது அப்பட்டமான அரசியலமைப்புச் &nbsp;சட்ட மீறல்களைக் கொண்டதாகவும் உள்ள தால், அவசர கதியிலான எஸ்ஐஆர் அமலாக்கத் திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கி ரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச &nbsp;நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இந்த மனுக்கள், செவ்வாய்க்கிழமை (நவ. 11) விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பு &nbsp;வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை முன் வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் &nbsp;செயலாளர் பெ. சண்முகம் சார்பில் ஆஜரான &nbsp;உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச் சந்திரன், பிரசன்னா ஆகியோர், &ldquo;வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ன கார ணத்திற்காக நடைபெறுகிறது? ஒரு மாத கால &nbsp;அவகாசத்தில் அவசர அவசரமாக இந்தப் பணியை மேற்கொள்வது ஏன்?&rdquo; என்று தேர்தல் &nbsp;ஆணையத்திற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு முன்பு இரண்டு முறை நடந்த சிறப்பு &nbsp;தீவிர திருத்தம் இரண்டு வருட காலத்திற்கு நடை பெற்றுள்ளது என்றும், ஆனால், இந்த முறை &nbsp;மட்டும் போதிய கால அவகாசம் அளிக்காமல் மிக மிக குறுகிய காலத்தில் பணிகளை மேற் கொள்வதை தாங்கள் எதிர்க்கிறோம் என்றும் சிபிஎம் தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 24-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். எஸ்ஐஆர் சட்ட செல்லுபடிதன்மை குறித்து &nbsp;நவம்பர் 26 அன்று விசாரிக்கப்படும் என்றும், &nbsp;எஸ்ஐஆர் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் விசா ரிப்பதால் சென்னை மற்றும் கொல்கத்தா உயர் &nbsp;நீதிமன்றங்கள் விசாரணையை நிறுத்தி வைக்க &nbsp;வேண்டும் என்றும், வேறு வகை உத்தரவு எது வும் பிறப்பிக்க வேண்டாம் என்றும் நீதிபதி கள் உத்தரவு பிறப்பித்தனர். அதிமுக இடையீட்டை &nbsp;ஏற்க நீதிபதிகள் மறுப்பு திமுக கூட்டணி கட்சிகள், எஸ்ஐஆருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவ டிக்கைகளை ஆதரித்து வாதிட அனுமதி கோரி &nbsp;அதிமுக ஒரு இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் கோரிக்கை வைத்தது. அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், &ldquo;எங்களுடைய மனுவை &nbsp;ஏற்றுக்கொண்டு எங்களையும் வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும்&rdquo; என்று கோரிக்கை வைத்தார். ஆனால், இந்த இடையீட்டு மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நீதிபதிகள், ரிட் மனு வாக தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தி னர். எனினும், அதிமுக வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், இதே மனுவிலேயே வாதிட அனு மதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு, நீதிபதிகள் இதே மனுவில் நீங்கள் வாதிட அனுமதிக்க முடி யாது, தனியாக ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.