தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கு  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

30 Dec 2025, 4:07 pm
வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கு  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
<p><strong>வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கு &nbsp;உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்</strong></p> <p>வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒருநாள் முன்னரே தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறி ஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கையில்,&ldquo;வாதாடும் நிலையில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் உச்சநீதி மன்றத்தில் வாய்மொழி வாதங்களை முன்வைப்பதற்கான கால அளவை விசாரணை தொடங்குவதற்கு குறைந் தது ஒரு நாளைக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். பதிவுபெற்ற வழக்கறிஞர்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வருகை சீட்டுகளை சமர்ப்பிக்கும் ஆன்லைன் போர்டல் வாயி லாகவே இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வாதா டும் வழக்கறிஞர்கள் 5 பக்கங்களுக்கு மிகாத ஒரு சுருக்கமான குறிப்பு அல்லது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். காலக்கெடு வை உறுதி செய்யும் வகையில், அதன் நகலை எதிர் தரப்பினருக்கு வழங்கிய பிறகு விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த காலக் கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்&rdquo; என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.