வாரம் தோறும் ஜாமீன் மனுக்கள் பட்டியலிட வேண்டும்: உச்சநீதிமன்ற உத்தரவு!
12 May 2026, 10:49 am

ஜாமீன் மனுக்கள் தேங்கிக் கிடக்கும் விவகாரத்தில் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்து வருவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதல்களுடன் கூடிய 8 கட்டளைகள் கொண்ட உத்தரவை பிறப்பித்தது.

1.ஜாமீன் மனுக்களை விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.

2.ஜாமீன் மனுக்கள் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக பட்டியலிடப்பட வேண்டும்.

3.விசாரணைக்கு வராத ஜாமீன் மனுக்கள் தானாகவே அடுத்த பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

4.வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு முன்பே நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

5.ஜாமீன் மனுக்களின் நகல்களை முன்கூட்டியே அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.

6.தடய அறிவியல் ஆய்வக அறிக்கைகள் தாமதமாவதை சரிசெய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும்.

7.புலனாய்வு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

8.எந்த விதத்திலும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.