கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு தமிழக அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
5 Nov 2026, 10:54 pm

கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு தமிழக அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

சென்னை, நவ. 5 –நெல்லை கவின் செல்வ கணேஷ் சாதி ஆணவப் படுகொலைவழக்கில், பெண்ணின் பெற்றோருக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின்செல்வகணேஷும், பாளையங் கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை27-ஆம் தேதி, சுபாஷினியின் குடும்பத்தினரால் கவின் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இவ்வழக்கில், சுபாஷினியின் இளைய சகோதரர் சுர்ஜித், உறவினர் ஜெயபால், பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சரவணனும்கிருஷ்ணகுமாரியும் காவல் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வந்ததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருநெல்வேலி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சரவணன் - கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் தங்களது மகளின்காதல் விவகாரத்தை 2016-17-ஆம் ஆண்டிலிருந்தே அறிந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், சரவணன் தனது மகளைஎச்சரித்ததுடன், 2018-19-ஆம் ஆண்டுகளில் கவினிடமும் தொலைபேசியில் பேசியதாகவும், கிருஷ்ணகுமாரி கவினின் தாயைத் தொலைபேசியில்அழைத்து எச்சரித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பெற்றோருக்கும் சுர்ஜித்துக்கும் இடையே சந்திப்போ, உரையாடலோ நடைபெற்றதை நிரூபிப்பதற்கான நேரடிச் சாட்சியங்களோ தடயங்களோ இல்லை என்று கூறி, சரவணன், கிருஷ்ண குமாரி ஆகிய இருவர் மீதான குற்றப்பத்திரிகையைச் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளை ரத்து செய்தது.இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. புலனாய்வாளர்கள் கண்டறிந்த பல்வேறு அம்சங்களை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு வியாழக்கிழ மையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றத்தின்உத்தரவைரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.