தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்திற்கு எதிரான மனு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
24 Jun 2026, 8:49 pm

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்திற்கு எதிரான மனு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

ராஜஸ்தான் தனியார் மருத்து வக் கல்லூரிகளின் கட்டண கொள்ளை தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள் ளது.

ராஜஸ்தானில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கான கல்விச் கட்டணம் ரூ. 18.90 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை வசூலிக்கப்படு கிறது. இது தொடர்பாக மருத்துவப் படிப்புக்குத் தயாராகி வரும் மாண வர் ஒருவர் ராஜஸ்தான் உயர் நீதிமன் றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தி ருந்தார். அம்மனுவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) தகுதி வரம்பான ஆண்டு வரு மானம் ரூ. 8 லட்சத்துடன் ஒப்பிடுகை யில், இந்தக் கட்டண அமைப்பு முற்றிலும் முரணாக உள்ளது என்று குறிப்பிட்டிருந் தார். ஆனால், உயர் நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, அரசு நிறுவ னங்களைப் போல தனியார் நிறுவனங்க ளையும் குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று யாரும் கூற முடியாது. தனியார் நிறுவனங்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, அதை அரசு நிறுவனங்களுக்கு இணையாகக் குறைக்க வேண்டும் என்று ஒருவர் கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதி மன்றம் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கமும் கட்ட ணக்கொள்ளையும் தீவிரமடையும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.