தீக்கதிர் விரைவு செய்திகள்
9 Oct 2026, 10:30 pm

ஆந்திர அரசின் 34% இடஒதுக்கீடு அறிவிப்பை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34% இடஒதுக்கீடு வழங்கி இரண்டு அரசாணைகளைப் பிறப்பித்தது.இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த ஆந்திரப் பிரதேச

உயர்நீதிமன்றம், 1992ஆம் ஆண்டில் இந்திரா சாஹனி வழக்கின் தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட 50% உச்சவரம்பைத் தாண்டி மொத்த இடஒதுக்கீட்டை இது உயர்த்துகிறது என்ற அடிப்படையிலும், இடஒதுக்கீடு உச்சவரம்பு மீறப்பட்டதை நியாயப்படுத்த அனுபவப்பூர்வமான தரவுகள் இல்லை எனவும் கூறி அரசின்

அரசாணைகளை ரத்து செய்து உத்தர விட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக ஆந்திரப் பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஷீல்நாகு ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வாதங்க ளுக்குப்பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஆந்திரப் பிரதேசஉயர்நீதிமன்றம் மிகவும் நியாயமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இடஒதுக்கீட்டை 34% ஆகநிர்ணயிப்பதற்காக ஆந்திரப்பிரதேச அரசு அளித்தஒருங்கிணைந்த குடும்பக்கணக்கெடுப் பின்தரவுகள் பொருத்த மற்றவை என்று உயர்நீதிமன்றம் கூறியதில் தவறை காணமுடியவில்லை. அதனால் ஆந்திர அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.

ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆம்ஆத்மி, சமாஜ்வாதி ஆதரவு

தில்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக சனிக்கிழமை நடைபெறவுள்ள மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கூறுகையில், “தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி முழு ஆதரவுஅளிக்கும். தனது கட்சியின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள் வார்கள். கடந்த முறை நடைபெற்ற போராட்டத்தில் சமாஜ்வாதி,இடதுசாரி கட்சிகள், பிஜு ஜனதா தளம் அனைத்துக் கட்சிகளுடன் பங்கேற்றோம். இந்தமுறையும் அவர்களோடு நாங்களும் பங்கேற்போம். அதாவது எதிர்க்கட்சிகளின் ஆதரவில் ஜந்தர் மந்தர் போராட்டம் நடைபெறும்” என அவர் கூறினார்.

அதே போல சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌத்ரி, “சனிக்கிழமை நடைபெறும் போராட்டம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது. அக்டோபர் 2 அன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றது போல இந்த போராட்டத்திலும் பங்கேற்போம். எதிர்கட்சிகளுடன் மாணவர்கள், இளைஞர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்து வோம்” என அவர் கூறினார்.

மேற்குவங்கம், அசாம் இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி!

மேற்கு வங்கத்தின் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாமின் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்கத்தின் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாமின் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் அக். 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.

மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ரெஜிநகர் பாஜக வேட்பாளர் ஷங்கராவ் சர்கார் 1,29,914 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நந்திகிராமில் பாஜக வேட்பாளர் ஹசி ராணி ரத் 1 லட்சத்து 22 ஆயிரத்து 753 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அசாமின் நாகோன் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தேவசிஷ்சர்மா 1 லட்சத்து 66 ஆயிரத்து 134 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.