புற்றுநோய் மருந்து 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை - உச்ச நீதிமன்றம் கண்டனம்
23 Sept 2026, 1:30 pm

புற்றுநோய்க்கான மருந்து 10 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதும் அப்பட்டமான பகல் கொள்ளை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மருந்து நிறுவனங்கள், அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிப்பதை தடுக்க உத்தரவு பிறப்பிக்கக்கோரியும், விலை கட்டுப்பாட்டை கண்டிப்பாக உறுதி செய்து, மருந்து சில்லறை விற்பனையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுக்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், மூலக்கூறு மருந்துகளை பரிந்துரைக்காத மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்து விற்பனையாளருக்கு ரூ.2,700-க்கு விற்கப்படுவதும், அதே மருந்து நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.27,000 என 10 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதும் அப்பட்டமான பகல் கொள்ளை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகள்

முற்றிலும் மௌனமாக இருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.