கரப்பான் பூச்சி கட்சி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மழுப்பல்
25 May 2026, 9:30 pm
<p><strong>கரப்பான் பூச்சி கட்சி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மழுப்பல்</strong> </p><p>“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” யோடு தொடர்புடைய நபர்க ளின் செயல்பாடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதி பதிகள் ஜோய்மால்யா பாக்சி, வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோஸ்வாமி, “கரப்பான் பூச்சி அமைப்பு நீதித் துறையின் நற்பெயரை கெடுக்கிறது. அதனால் தொடர்புடைய நபர்களின் செயல்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்,”இதில் அவ்வளவு பெரிய அவசரம் எதுவும் இல்லை. நாங்கள் இதைப் பார்த்துக்கொள்கி றோம். இதை இவ்வளவு உணர்வுப்பூர்வ மாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த மனுக்கள்அதற்குரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்” என மழுப்பலாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தார். இந்த கரப்பான் பூச்சி பிரச்சனைக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கருத்து தான் காரணம் என்பது குறிப்பிடத் தக்கது. </p>
