தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளைகளை அமைத்திடுக
15 Jul 2026, 10:48 pm
<p><strong>தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளைகளை அமைத்திடுக</strong></p><p>திருப்பூர், ஜூலை 15- தென்னிந்தியாவில் உச்சநீதி மன்ற கிளைகளை அமைக்க வலியு றுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதித்துறையின் சுதந்திரம் முழு மையாக பாதுகாக்கப்பட வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரை யும் உள்ளடக்கிய, நேர்மையான, திற மையான நீதிபதிகள் வெளிப்படைத் தன்மையோடு நியமிக்கப்பட வேண் டும். தென்னிந்தியாவில் உச்சநீதி மன்றத்தின் கிளைகளை அமைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன் றத்தில் தமிழை அலுவல் மொழி யாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டு வழக் கறிஞர் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்ய அனுமதியளிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இ-பைலிங் நடைமுறையில் உள்ள குளறுபடிகள் களையப்பட்டு, இணையதளம் எளிமைப்படுத்தப்பட வேண்டும். காலியாக உள்ள 300 நீதிமன்றப் பணியிடங்களை விரை வில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு முழுவதும் அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் ்பாட்டத்திற்கு சங்க மாநிலக்குழு உறுப்பினர் பொன்ராம் தலைமை வகித்தார். இதில், மூத்த வழக்கறி ஞர் பா. ராஜேந்திரன், மாவட்டச் செய லாளர் அ. மணவாளன், மாவட்டப் பொருளாளர் உதயசூரியன், மாநி லக்குழு உறுப்பினர்கள் அ.அமர் நாத், எஸ்.ஏ.தமயந்தி மற்றும் நிர்வாகி கள் எஸ்.கண்ணன், எஸ்.வினோத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், வழக்கறிஞர் ரங்கசாமி நன்றி கூறினார். கோவை கோவை நீதிமன்ற வாயில் எண் 4 அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜோதி குமார் தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொருளாளர் மாசேதுங், மாவட்டத் தலைவர் என்.ராமர், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.கோபால் சங்கர். எஸ்.ராஜசிம்மன், எம்.ஆனந்தன் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட னர்.</p>
