முந்தய பக்கம்

பொது இடங்களில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை

9 Feb 2026, 3:02 pm
பொது இடங்களில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை
<p><strong>பொது இடங்களில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை</strong></p> <p>தில்லியைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்பு,&ldquo;ரம்ஜான் மற்றும் பக்ரித் பண்டிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருகின்றன. எனவே, அன்றைய தினங்க ளில் மசூதிகளுக்கு வெளியே பொது இடங்களில் தொழு கை நடத்த விதிக் கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளைத் தளர்த்த வேண்டும்&rdquo; என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு திங்களன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களுக்குப் பிறகு,&rdquo;பொது இடங்களில் தொழுகை நடத்தினால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் விதி களில் விலக்கு அளிப்பது மற்ற மதத்தின ரிடையேயும் இதேபோன்ற கோரிக்கைக ளை எழுப்ப வழிவகுக்கும். ஏற்கனவே நீதிமன்றங்கள் வழங்கிய வழிகாட்டுதல்க ளின்படி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காமல் வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும். எனவே, பண்டிகை களுக்காக மட்டும் விதிகளில் மாற்றம் செய்ய முடியாது&rdquo; என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram