முந்தய பக்கம்

நீதிபதி கவாய் மீது  காலணி வீசிய வழக்கறிஞர் மீது தாக்குதல் உச்சநீதிமன்ற

10 Dec 2025, 3:18 pm
நீதிபதி கவாய் மீது  காலணி வீசிய வழக்கறிஞர் மீது தாக்குதல் உச்சநீதிமன்ற
<p><strong>நீதிபதி கவாய் மீது &nbsp;காலணி வீசிய வழக்கறிஞர் மீது தாக்குதல் உச்சநீதிமன்ற</strong></p> <p>தலைமை நீதி பதியாகப் பணியாற்றிய &nbsp;பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது தாக்குதல் நடந்துள்ளது. &nbsp;கடந்த அக்டோபர் மாதம் பி.ஆர். கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது சனாதன தர்மம் மற்றும் விஷ்ணு சிலை தொடர்பான பொதுநல வழக்கில் நீதிபதி கவாய் தெரிவித்த சில கருத்துக்க ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார். &nbsp;இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துடன் கடும் கண்டனத்தையும் கிளப்பி யது. &nbsp;இந்தச் சம்பவத்தினால் ராகேஷின் வழக்கறிஞர் உரிமம் பார் கவுன்சிலால் இடைநீக்கம் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலி ருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். அவர் மீது கிரிமினல் அவமதிப்பு நடவ டிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில், டிச.9 அன்று தில்லி கர்கர்டூமா நீதிமன்ற வளாகத்திற்கு வந்த ராகேஷ் கிஷோரை, கவாயை அவம தித்ததற்காக சுமார் 100 முதல் 150 பேர் கொண்ட ஒரு கூட்டம் திடீரென சுற்றி வளைத்து காலணியால் தாக்கியுள்ள னர். அந்தச் சூழலில் ராகேஷ் கதறிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.</p>
Share
FacebookXWhatsAppTelegram