போஜ்சாலா விவகாரம் சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
14 Jul 2026, 9:17 pm

போஜ்சாலா விவகாரம் சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா-கமல் மௌலா மசூதி வளாகத்தை, ‘இந்து கோவில்’ என்று அறிவித்த அம்மாநில உயர்நீதி மன்றத்தின் மே 15ஆம் தேதி தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் அமர்வு (3 நீதிபதிகள் அமர்வு - சூர்யா காந்த், ஜோய்மால்யா பாக்சி, மோகனா) முன்பு ஆஜரான முஸ்லிம் (மசூதி) தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் ஹுசெபா அஹ்மதி, ஏ.எம். சிங்வி ஆகியோர்,”போஜ்சாலா மசூதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுமூகமாகத் தொழுகை நடைபெற்று வந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் திடீரென அதற்கான அனுமதியை ரத்து செய்தது எப்படி? உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இது போன்ற ஒரு மனுவை உயர்நீதிமன்றம் எவ்வாறு விசாரித்துத் தீர்ப்பு வழங்கியது?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், அயோத்தி தீர்ப்பை மற்ற வழக்குகளுக்குப் பொதுப் படையாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ’உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்கெனவே ஒரு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அதை இப்போ தே மாற்ற வேண்டாம். இடைக்கால உத்த ரவின் மூலம் பழைய நிலையை மீண்டும் கொண்டு வருவது நிர்வாகச் சிக்கல் களை உருவாக்கும்” என வாதிட்டார்.

அரசு மற்றும் மசூதி தரப்பு வாதங்க ளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,”இரு தரப்பினரின் உரி மைகளைப் பாதிக்காத வகையில், ஒரு தற்காலிக இடைக்கால நடவடிக்கையாக, போஜ்சாலா வளாகத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளியில், வெள்ளிக் கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொள்ளலாம். இந்த ஏற்பாடு இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்காலி கமானது.

உயர்நீதிமன்றத்தின் மே 15ஆம் தேதி தீர்ப்பின் அடிப்படையில், இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை இந்த வளாகத்தில் எந்தவொரு கட்டமைப்பு மாற்றத்தையும் மேற்கொள்ளக் கூடாது; அவ்வாறு செய்ய வேண்டுமானால் நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும். இந்த நீதிமன்றத்தில் லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் சரஸ்வதி தேவி சிலையை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் கட்டாயம் சிலையை மீட்டே ஆக வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் கவனமாகச் செயல்பட வேண்டும்” என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை மிகவும் உணர்ச்சி கரமானதாகக் கருதுவதாகக் கூறிய உச்சநீதிமன்றம், வழக்கை 10 முதல் 20 நாட்களுக்குள் உரிய அமர்விற்குப் பட்டியலிடுமாறு உத்தரவிட்டுள்ளது.