மேகமலை வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
29 Sept 2026, 9:59 pm
<p><strong>மேகமலை வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்</strong></p><p>புதுதில்லி, செப்.29-மேகமலை விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத் தில் செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கியஅமர்வு,”மேகமலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டனவா; ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. </p><p>அதற்கு தமிழக அரசுத் தரப்பில், ஏற்கெனவே அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற விஷயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அறிக்கையை வாசித்த நீதிபதிகள், “தமிழக அரசினுடைய அறிக்கை இலவம்பஞ்சு தோட்டங்களுக்கு ஆதரவாக உள்ளது.இலவம்பஞ்சு தோட்டங்கள் அமைக்க வேண்டும் என்றால் அவர்களுடைய சொந்த நிலங்களில் அமைக்கவேண்டியது தானே; வனப்பகுதியை ஆக்கிரமித்து தான் அமைக்க வேண்டுமா; சூழலியலுக்கு வனப்பகுதி மிகமுக்கியத்துவம் வாய்ந்தது, அதை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்து இவ்வழக்கை ஒத்திவைத்தனர். </p>
