தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுயலாபத்திற்காக தொழிலாளர் விரோத சட்டங்களை ஆதரிப்பதா?

9 Dec 2025, 4:25 pm
சுயலாபத்திற்காக தொழிலாளர் விரோத சட்டங்களை ஆதரிப்பதா?
<p><strong>சுயலாபத்திற்காக தொழிலாளர் விரோத சட்டங்களை ஆதரிப்பதா?&nbsp;</strong></p> <p>கோயம்புத்தூர், டிச.9 - கோயம்புத்தூரில், ஒன்றிய அரசு கொண்டு &nbsp;வந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் &nbsp;திரும்பப் பெற வலியுறுத்தி டிச.8 திங்களன்று இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்றுப் பேசினார். ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்துவதாக அறிவித்துள்ள இந்த நான்கு சட்டத் தொகுப் புகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் &nbsp;முழுவதும் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இளம் தலைமுறைக்கு பெரும் ஆபத்து இச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், இந்தி யாவில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள், சலுகைகள் அனைத்தும் பறி போகும். இச்சட்டத் தொகுப்புகள் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே நிறை வேற்றப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை மேலும் அதிகரிக்கக் கூடிய &nbsp;வகையில் இவை அமைந்துள்ளன. இந்தச் சட்டங்கள் மூலம், எந்த ஒரு தொழி லாளிக்கும் வேலை பாதுகாப்பு, ஊதிய உத்தர வாதம், நிரந்தர வேலை என்பதே இல்லாத நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. இது இப்போதுள்ள தொழிலாளர்களுக்கு மட்டு மல்ல, எதிர்காலத்தில் வரக்கூடிய இளம் தலை முறைக்கும் எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லாத &nbsp;ஒரு கொடுமையாகும். எனவே, இச்சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதிமுக-வுக்கு கேள்வி &ldquo;அனைத்துக் கட்சியினரும் தொழிற்சங்கங் களை வைத்துள்ளனர். இதில் அண்ணா தொழிற் சங்கம் என்ற அமைப்பை வைத்துள்ள அதிமுக-வின் நிலைப்பாடு என்ன?&rdquo; என்று பெ. சண்முகம் கேள்வி எழுப்பினார். தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பும் அச்சுறுத்தலும் வரும் போது, தேர்தல் அரசியல் லாபம் கருதி ஒன்றிய &nbsp;பாஜக அரசின் தொழிலாளர் வர்க்க விரோத நடவ டிக்கைகளை அதிமுக ஆதரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார். மேலும், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவதற்கான முயற்சி களை மேற்கொள்வோம் என்று அறிவித்தார். ஒரு கோடி வாக்காளர் விடுபடும் அபாயம் இறுதியாக தமிழ்நாட்டில், இடம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் ஆன்லைன் மூலமாகக் கூட வாக்காளர் பட்டியலில் தங்களைச் சேர்க்க முடியாமல் ஒரு கோடி வாக்காளர்கள் விடுபட வாய்ப்புள்ளது என்றும், ஒரு வாக்காளர் பெயர் கூட விடுபடாமல் இருக்கத் தேர்தல் ஆணை யங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் &nbsp;அவர் வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.