ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்
8 Mar 2026, 3:42 pm

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு மதுரை, மார்ச் 8- மதுரை மாவட்டம் திருமங்க லம் அருகே உள்ள ராயபாளை யத்தில், அதிமுக உள்ளிட்ட பல் வேறு கட்சிகளில் இருந்து தொண் டர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுக வில் இணையும் நிகழ்வு சனி யன்று நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ் வில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய உறுப்பி னர்களை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மு. மணிமாறன், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், “50 ஆண்டுகால அரசி யல் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்ட தலைமைக்கு விசுவாச மாக இருந்தேன். நான் இருந்த இயக்கத்தில் தனி அணியோ ஆதரவாளர்கள் கூட்டமோ உரு வாக்க எண்ணியதில்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டேன். தற் போது அதிமுகவில் தொண்டர் களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள் ளன. தனிப்பட்ட அரசியல் கார ணங்களால் அந்த இயக்கம் வழி மாறியுள்ளது. அந்த நிலையை உணர்ந்து திமுகவில் இணைந் தேன்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உரை யாற்றிய முதல்வர் மு.க.ஸ்டா லின், “சில காலத்திற்கு முன்பு வரை ஓ.பன்னீர்செல்வம் இந்த மேடை யில் இருப்பார் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது. ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்த தாய்க்கழகமான திராவிட முன் னேற்றக் கழகத்திற்கே அவர் திரும்பி வந்துள்ளார். அவரையும், அவருடன் இணைந்துள்ள அனை வரையும் மனமுவந்து வரவேற்கி றேன்” என்றார். மேலும், “2021 தேர்தலை விட தற்போது திமுக கூட்டணி அதிக பலம் பெற்றுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.