தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேளாண் விளைபொருட்களுக்கான ஆதார விலை; மோடி அரசின் ஏமாற்று வேலை அம்பலமானது!

2 Dec 2025, 4:11 pm
வேளாண் விளைபொருட்களுக்கான ஆதார விலை; மோடி அரசின் ஏமாற்று வேலை அம்பலமானது!
<p><strong>வே ளாண் விளைபொருட்களுக்கான ஆதார விலை;மோடி அரசின் ஏமாற்று வேலை அம்பலமானது!</strong></p> <p>புதுதில்லி, டிச. 2 - வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை &nbsp;மடங்கு ஆதார விலை நிர்ணயிப்பது தொடர்பாக &nbsp;ஒன்றிய பாஜக அரசு அளித்திருந்த வாக்குறுதியும் &nbsp;வழக்கம்போல ஒரு ஏமாற்று வேலை தான் &nbsp;என்பதும், இதுவரை அப்படியொரு ஆதார விலையை அரசு விவசாயிகளுக்கு வழங்க வில்லை என்பதும் சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய வேளாண்மை அமைச்சகத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி ஒன்றை &nbsp;(எண்: 355/2025 டிசம்பர் 2) எழுப்பியிருந்தார். &ldquo;விவசாய விளை பொருளுக்கு ஆதார விலையை, விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமி நாதன் குழு அறிக்கையின்படி, சி2 + 50% என்ற &nbsp;அடிப்படையில், அமலாக்குவதாக விவசாயிகள் &nbsp;போராட்டத்தின் போது அரசு தந்த வாக்குறுதி யின் நிலைமை என்ன? இக்கோரிக்கை நிறை வேற்றப்படுவதற்கு என்ன காலவரையறை?&rdquo; என்று அவர் கேட்டிருந்தார். 22 பயிர்களுக்கு 1.5 மடங்கு ஆதார விலை இதற்கு ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாகூர் பதிலளித்துள்ளார். அதில், &ldquo;ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசுகள் &nbsp;மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, விவசாயச் செலவுகள் மற்றும் விலை களுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரை களின் அடிப்படையில், 22 பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) அரசு நிர்ணயிக் கிறது. &nbsp; பேரா எம்.எஸ். சுவாமிநாதன் தலைமை யில் 2004-இல் அமைக்கப்பட்ட தேசிய விவசாயி கள் ஆணையம் (NCF), குறைந்தபட்ச ஆதரவு விலையானது (MSP) சராசரி உற்பத்திச் செலவை &nbsp;விடக் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. &nbsp; பட்ஜெட்டில் வெளியான &nbsp;கொள்கை அறிவிப்பு இப்பரிந்துரையைச் செயல்படுத்தும் வகை யில், 2018-19 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில், உற்பத்திச் செலவை விட, குறைந்த பட்சம் ஒன்றரை மடங்கு (1.5 மடங்கு) என்ற அள வில் எம்.எஸ்.பி (MSP) இருப்பதை ஒரு முன்- தீர்மானிக்கப்பட்ட கொள்கையாக அரசு அறிவித் தது. அதன்படி, அனைத்து காரீப், ராபி மற்றும் பிற &nbsp;வணிகப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு &nbsp;விலையானது, சராசரி உற்பத்திச் செலவை விடக் &nbsp;குறைந்தது 50 சதவிகிதம் கூடுதல் வரம்பு &nbsp;(margin) இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. &nbsp;குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பரிந்துரைக் கும் போது, உற்பத்திச் செலவு, ஒட்டுமொத்த கிராக்கி - விநியோக நிலவரம், உள்நாட்டு மற்றும் &nbsp;சர்வதேச விலைகள், பயிர்களுக்கு இடையிலான &nbsp;விலை சமநிலை, விவசாய மற்றும் விவசாயம் சாராத துறைகளுக்கு இடையிலான வர்த்தக விதிமுறைகள் மற்றும் பொருளாதாரத்தின் பிற பகுதிகளின் மீதான தாக்கம் ஆகிய முக்கியக் காரணிகளுடன், நிலம், நீர் மற்றும் பிற உற்பத்தி &nbsp;வளங்களின் சீரான பயன்பாட்டை உறுதி செய்வ தையும், உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தது 50 சதவிகிதம் கூடுதல் வரம்பு இருப்பதையும் சி.ஏ.சி.பி (CACP) கருத்தில் கொள்கிறது&rdquo; என்று பதில் அளித்துள்ளார். உண்மைக்குப் புறம்பான முரண்பாடான பதில் இந்தப் பதில்களைச் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சு. வெங்கடேசன் எம்.பி., வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு விலை வழங்கப்படுகிறதா என்பதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை என்பதுடன், அவ்வாறு விலை வழங்கப்படவில்லை என்பதையே அமைச்சர் தந்துள்ள விவரங்கள் நிரூபிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். &ldquo;அமைச்சரின் பதில் உண்மைக்கு புறம்பான வற்றையும், அவரின் பதிலிலேயே முரண்களை யும் கொண்டுள்ளது. 2018 -19 பட்ஜெட்டில் விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு &nbsp;பரிந்துரைகளை அமலாக்க தரப்பட்ட உறுதி மொழியை குறிப்பிடும் அமைச்சர், அதற்கு அடுத்த வரியிலேயே நிர்ணயிக்கப்பட்ட விலை யாகச் சொல்லும் சூத்திரம் எம்.எஸ்.எஸ். குழு பரிந்துரைக்கு மாறானதாக உள்ளது. எம்.எஸ். சுவாமிநாதன் &nbsp;பரிந்துரைக்கு தொடர்பில்லை அடுத்த பத்தியில் குறைந்த பட்ச ஆதார விலையைத் தீர்மானிப்பதற்கு, விவசாயச் செலவு களை விலைகளுக்கான ஆணையம் கணக்கில் &nbsp;எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ள பல்வேறு &nbsp;அம்சங்கள் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைக்கு &nbsp;தொடர்பற்றவையாகவும், அவரின் பரிந்துரை களை நீர்த்துப் போகச் செய்பவையாகவும் உள்ளன. &nbsp;எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையில் குறிப்பிடப்பட்ட சி2 + 50% என்பது பயிரின் மொத்த உற்பத்தி செலவு மற்றும் நிலத்திற்கான வாடகை, முதலீடு மீதான நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதம், குடும்ப உழைப்பு ஈடு படுத்தப்பட்டு இருந்தால் அதன் மதிப்பு ஆகியவற் றுக்கான அனுமான செலவுகள் கணக்கிடப்பட்டு, அதை விட 50 சதவிகிதம் கூடுதலாக தர வேண்டு மென்பது தான். இது வழங்கப்படுகிறதா என்ப தற்கு அமைச்சர் நேரடியாக பதில் அளிக்க வில்லை, ஆனால் தரப்படவில்லை என்பதையே அவர் தந்துள்ள விவரங்கள் நிரூபிக்கின்றன. வாக்குறுதியையே &nbsp;கைகழுவிய மோடி அரசு? விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தரப்பட்ட வாக்குறுதி பற்றி எந்தக் குறிப்பும் அமைச்சரின் பதிலில் இல்லாதது ஏன்? அந்த வாக்குறுதியையே அரசு மறந்து விட்டதா? விவசாயிகள் சங்கங்களின் தலை யீட்டையே அரசு விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடா? அரசு ஏதோ விவசாயிகள் முன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி விட்டது போன்ற பாவனையை இந்த பதில் செய்வது உண்மையானால், விவசாயிகள் சங்கங்களிடம் விளக்கி போராட்டங்களை தொடராமல் பார்த்திருக்க முடியுமே? - &nbsp;இவ்வாறு இந்த அரசாங்கத்திடம் கேள்வி களை எழுப்பினால் நமக்கு உரிய விடை கிடைப்பதில்லை. மாறாக அவர்களின் பதிலில் இருந்து நமக்கு கூடுதல் கேள்விகளே எழு மென்பது அனுபவம். &nbsp;அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார &nbsp;விலைக்கும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்து ரைக்குமான இடைவெளி மூலம் எவ்வளவு வரு மானம் விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்படு கிறது என்று பல ஆய்வுகள் வெளி வந்துள்ளன. &nbsp;ஆகவே அமைச்சரின் பதில் தவறான சித்திரத்தை &nbsp;தருவதாக, முரண்களின் மொத்த உருவமாக இருக்கிறது&rdquo; என்று சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.