221 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு
6 Apr 2026, 4:15 pm
<p><strong>221 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு</strong></p>
<p>சிபிஐ(எம்எல்) லிப ரேசன் மாநிலச் செய லாளர் பழ. ஆசைத்தம்பி, கந்தர்வகோட்டையில் ஞாயிறன்று செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “எங்கள் கட்சியின் சார்பில் 14 தொகுதிகளை தேர்ந்தெ டுத்து தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலை சந்திக் கிறோம். இந்த 14 தொகு திகளில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியி லுள்ள இடதுசாரிக் கட்சி கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி யிட்டால் அந்தத் தொகுதி களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை திரும்பப் பெறுவது என மாநிலக் குழுவில் முடிவெடுத்துள் ளோம்” என்றார். இதனடிப்படையிலே யே கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாள ருக்கு ஆதரவாக எங்கள் வேட்பாளர் ஆ. ரேவதி போட்டியிருந்து விலகு கிறார், என்றும்; மேலும், வேட்பாளர் எம். சின்ன துரையின் வெற்றிக்கு முழு வீச்சில் களப்பணியாற்று வது என முடிவெடுத்துள்ள தாகவும் கூறினார். மேலும், “தமிழ்நாட்டை சூழ்ந்துவரும் மதவாத பாசிச சக்திகளின் ஆபத்தை உணர்ந்து, நாங்கள் தற்போது போட்டி யிடும் 13 இடங்களைத் தவிர இதர அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியை ஆதரிப்பது எனவும் முடிவெடுத்துள்ளோம்” என்றும் பழ. ஆசைத்தம்பி தெரிவித்தார்.</p>
