முந்தய பக்கம்

கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரைக்கு ஆதரவு!

6 Apr 2026, 5:30 am
கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரைக்கு ஆதரவு!

கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரைக்கு ஆதரவு!

புதுக்கோட்டை ஏப். 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் எம். சின்னதுரைக்கு ஆதரவு தெரிவித்து, சிபிஐ(எம்-எல்) லிபரேசன் வேட்பாளர் ரேவதி போட்டியிலிருந்து விலகினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் சார்பில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆ. ரேவதி, கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இங்கே ஏற்கனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம். சின்னதுரை போட்டியிடும் நிலையில், இடதுசாரிக் கட்சிகளின் ஒருமையை வெளிப்படுத்தும் விதமாக ஆ. ரேவதி போட்டியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram