50 ஆண்டுகளுக்குப் பிறகு மிரட்டும் ‘சூப்பர் எல்-நினோ’ வழிகாட்டு நெறிமுறை வெளியிடாமல் அலட்சியமாக இருக்கும் மோடி அரசு
5 Jun 2026, 12:51 am

50 ஆண்டுகளுக்குப் பிறகு மிரட்டும் ‘சூப்பர் எல்-நினோ’ வழிகாட்டு நெறிமுறை வெளியிடாமல் அலட்சியமாக இருக்கும் மோடி அரசு

புதுதில்லி 50 ஆண்டுகளுக்குப் பிறகு பசிபிக் பெருங்கடலில் ‘சூப்பர் எல்-நினோ’ உருவாக உள்ளது. இது ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பசிபிக் பெருங்கடலில் நீடிக்கும்.

இந்த ‘சூப்பர் எல்-நினோ’ தொடர்பாக ஐக்கிய நாடு கள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பசிபிக் பெருங்கடலின் மத்திய, கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதி கமாக சுமார் 2.5 டிகிரி செல்ஸியஸ் முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்வதையே ‘சூப்பர் எல்-நினோ’ நிகழ்வு ஆகும்.

இது உலகளாவிய வானி லையை தலைகீழாக மாற்றி, சில இடங்களில் கடும் வறட்சியையும், சில இடங்களில் பெருவெள்ளத் தையும் ஏற்படுத்தும் இயற்கை நிகழ்வாகும்.

குறிப் பாக, இந்தியாவின் முக்கிய பருவமழையான தென்மேற்கு பருவமழை பெருமளவில் குறைவ தால் இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்காவின் பல பகுதி களில் கடுமையான வறட்சி நிலவும்.

இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. கொடிய எல்-நினோ ‘சூப்பர் எல்-நினோ’ 1972-73, 1997-98 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது

. ஆனால் இந்த ஆண்டு உருவாக இருக்கும் சூப்பர் எல்-நினோவை 1877– 1878 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கொடிய எல்-நினோவுடன் விஞ்ஞானிகள் ஒப்பிடுகின்றனர்.

அன்றைய காலகட்டத்தில் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக் கான மக்கள் உயிரிழந்தனர்.

இதே பாதிப்பு இந்த ஆண்டு ஏற்படலாம் என காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவின் வடமேற்கு சமவெளி, தாய்லாந்தின் நெல் வயல் கள், ஆஸ்திரேலியாவின் கோதுமை மண்டலம், இந் தோனேசியாவின் பனை எண்ணெய் தோட்டங்கள் ஆகியவை வறட்சியால் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கைகள் அடுத்தடுத்து வந்துள்ளன.

அதே சமயம் குடிநீர் பஞ்சம் மிக மோசமான அளவில் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் ‘சூப்பர் எல்-நினோ’ தொடர்பாக விவாதங்கள், அவசர ஆலோ சனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆட்சி செய்யும் ஒன்றிய மோடி அரசோ, ‘சூப்பர் எல்- நினோ’ தொடர்பாக இன்னும் வழிகாட்டு நெறி முறையோ அல்லது ஆலோசனைக் கூட்டமோ நடத்த வில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.