தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட மாநிலங்களில் கடும் வறட்சி; தென் மாநிலங்களில் இயல்புக்கு மாறாக கனமழை தீவிரமடையும் ‘சூப்பர் எல் நினோ’

18 May 2026, 9:16 pm
வட மாநிலங்களில் கடும் வறட்சி;  தென் மாநிலங்களில் இயல்புக்கு மாறாக கனமழை தீவிரமடையும்  ‘சூப்பர் எல் நினோ’

வட மாநிலங்களில் கடும் வறட்சி; தென் மாநிலங்களில் இயல்புக்கு மாறாக கனமழை தீவிரமடையும் ‘சூப்பர் எல் நினோ’

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கமான ஜூன் 1ஆம் தேதிக்கு பதி லாக, சற்று முன்கூட்டியே மே 26ஆம் தேதியே கேரளத்தில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளம், தமிழகத்தின் தென் மாவட் டங்களில் பரவலான கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கால பருவநிலை மாற்றத்தி ற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் ‘சூப்பர் எல் நினோ’ தான் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வட மாநிலங்களில் வறட்சி

இந்த ‘சூப்பர் எல் நினோ’ இந்தியாவில் ஏற் படுத்தும் பாதிப்புகள் குறித்து தெற்காசிய வானிலை ஆய்வாளர்கள் மேலும் கூறுகை யில்,”வழக்கமான ‘எல் நினோ’ நிகழ்வின் போது பசிபிக் பெருங்கடலின் மத்திய, கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கும். ஆனால், தற்போதைய சூழலில் கடல் வெப்பநிலை வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயர்ந்து வரு வதால், இது ஒரு தீவிரமான ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வாக மாறக்கூடும். இதனால் இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை யிலான தென்மேற்கு பருவமழையின் ஒட்டு மொத்த அளவு, அதன் நீண்டகால சராசரியில் 92% ஆக குறைய வாய்ப்புள்ளது. இந்த பருவ மழை காலத்தில் மத்திய, வட இந்திய மாநிலங்க ளான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதே சம் போன்ற பகுதிகளில் பருவமழை பெருமள வில் பொய்க்கக்கூடும். குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எல் நினோவின் தாக்கம் உச்சமடையும் போது, வட மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவலாம். கோடைக்கால வெப்ப அலைகளின் தாக்கம் வழக்கத்தை விட 5 டிகிரி வரை அதிகமாக இருக்கக்கூடும். இது விவசாயம், குடிநீர் ஆதாரங்களை கடுமையாக பாதிக்கலாம்.

தென்னிந்திய மாநிலங்கள்

எல் நினோ காலங்களில் இந்தியாவின் தெற்கு தீபகற்ப பகுதி, கடலோரப் பகுதிகளில் மாறுபட்ட வானிலை சூழல் நிலவும். தென் மாநிலங்களின் கடலோரப் பகுதிகள், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திராவின் கடலோரப் பகுதிக ளில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது. தென் மாநிலங்களில் மழைப் பொழிவு வித்தியாசமாக இருக்கும். கிட்டத்தட்ட அதீத கனமழையாக கூட மாற லாம்” என கணித்துள்ளனர்.

கோடைக்கால சாலையோர கடைகளை நிலைகுலையச் செய்த பருவம் தவறிய மழை கடன் வாங்கி தவிக்கும் தென்னிந்திய மக்கள்

கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தென்னிந்திய மாநில மக்கள் குளிர்ச்சிமிக்க பொருட்களை அதிகம் நாடுவார்கள். இதனால் நெடுஞ்சாலை மற்றும் சாலையோரங்களில் இளநீர், வெள்ளரி, கரும்பு சாறு மற்றும் இதர பழச்சாறு கடைகள் கோடைக் காலத்தில் முளைப்பது வழக்கம். இந்த கடை களை துவங்குபவர்கள் வங்கி மூலம் கடன் பெற்றும், நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு வாங்கியும் இடைக்கால வியாபாரங்களில் இறங்குவார்கள். இந்த ஆண்டும் மார்ச் மாதம் முதலே தென்னிந்திய மாநில மக்கள் சாலையோரங்களில் குளிர்பான கடை களை துவங்கினர். ஆனால் காலநிலை மாற்றத்தால் ஏப்ரல் மாதத்தின் பாதியிலேயே வெயில் குறைந்து, மழை வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டது. தற்போதைய கத்தரி வெயில் காலத்தில் கனமழை பெய்து வருகிறது. வானிலை கணிப்பை மீறி சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் குளிர்ச்சிமிக்க பொருட்களை தவிர்த்து வருகின்றனர். சாலையோர கோடைக் கால குளிர்பான கடைகள் மூடப்பட்டு விட்டன. கடன் வாங்கி குறுகிய கால வியாபாரத்தில் இறங்கிய மக்கள் காலநிலை மாற்றத்தால் நிலைகுலைந்து தவித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.