முந்தய பக்கம்

சுந்தர்.சி. படுதோல்வி நிச்சயம்!

2 Apr 2026, 3:50 pm
சுந்தர்.சி. படுதோல்வி நிச்சயம்!
<p><strong>சுந்தர்.சி. படுதோல்வி நிச்சயம்!</strong></p> <p>மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக சி.சுந்தர் களமிறங்கியுள்ளார். குஷ்பூ பா.ஜ.க-வில் இணையக் காரணமாக இருந்தவராகக் கருதப்படும் இவர், இப்போது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராகப் போட்டியிடுகிறார். மதுரையின் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருமுறை கூடக் குரல் கொடுக்காத சுந்தர், தனது திரைப்பட பிம்பத்தை யும் சமூக வாக்குகளையும் மட்டுமே நம்பிக் களமிறங்கியுள்ளார். &ldquo;விஜயைச் சகோதரராகப் பார்க்கிறேன், அவரை விமர்சிக்க மாட்டேன்&rdquo; எனச் சுந்தர் கூறுவதை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் அங்கீகரிக்கின்றனவா? &ldquo;விஜய்க்கு இருப்பது போலச் சுந்தர்.சி-க்கும் ஒரு கூட்டம் உள்ளது&rdquo; என ஏ.சி. சண்முகம் பேசியிருப்பது நகைப்புக்குரியது. திரை பிம்பத்திற்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்த மதுரை மக்கள், சுந்தர்.சி-யைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பது உறுதி.</p>
Share
FacebookXWhatsAppTelegram