தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சன் ராஜா ஆயில் மில் நிர்வாகத்தால் உயிர் உடமைக்கு ஆபத்து

19 Aug 2026, 11:32 pm
சன் ராஜா ஆயில் மில் நிர்வாகத்தால் உயிர் உடமைக்கு ஆபத்து

சன் ராஜா ஆயில் மில் நிர்வாகத்தால் உயிர் உடமைக்கு ஆபத்து

ஈரோடு, ஆக. 19-மிஸ்டர் கோல்டு கடலை எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சன் ராஜா ஆயில் மில் நிறுவனத்தால் அப்பகுதியினரின் உயிர், உடமைக்கு ஆபத்து எழுந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோடு தாலுக்கா காவல் ஆய்வாளரிடம் புதனன்று அளித்த புகார் மனுவில், ஈரோடு வட்டம், மூலக்கரையில் இயங்கி வரும் சன் ராஜா ஆயில் மில் நிறுவனம் தொடர்ந்து ஈவு இரக்கமற்ற முறையில் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. நிலம், நீர் மற்றும் காற்றில் மாசு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த புகாரிதன் பேரில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபட்டதை கண்டறிந்தது. அத்துடன் ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

அதே சமயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் ஏற்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நிறுவனத்தை இயக்க தடை விதித்தது. ஆயினும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தொடர்ந்து எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில் நிறுவனம் இயங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாககிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆதாரங்களை வழங்க கேட்டார். அவர் கேட்டுக் கொண்டதால் ஆதாரங்களை சமர்ப்பிக்கவே ஆலைக்கு வாகனங்கள் வந்து செல்வதை விடியோ எடுக்கப்பட்டது. இந்த ஆதாரங்களை உதவி இயக்குனருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஆதாரங்களை உதவி இயக்குனருக்கு அனுப்ப விடியோ எடுத்த போது சன் ராஜா ஆயில் மில் நிறுவன பணியாளர் விடியோ எடுப்பதை பார்த்துக் கொண்டிருந்ததுடன் வீடியோ எடுப்பவர்களை யார் என்று விசாரித்தார். அதை வைத்து காவல் நிலையத்தில் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பாக புகார் செய்துள்ளனர்.

கிராம மக்கள் நீர், நிலம், காற்று மாசடைந்ததால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலோடு, நிறுவனத்தினரால் கிராமத்தில் வசிப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பயப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு உயிர் மற்றும் உடைமைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எனவேகிராமத்தினருக்கு ஏதாவது உயிர் மற்றும் உடமைக்கு பாதிப்பு ஏற்பட்டால் சன் ராஜா ஆயில் மில் நிறுவனமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.