தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிரம்ப்பின் போர்வெறி ஆதிக்கத்தை ஆதரிக்க உச்சி மாநாடு

9 Mar 2026, 4:24 pm
டிரம்ப்பின் போர்வெறி ஆதிக்கத்தை ஆதரிக்க உச்சி மாநாடு
<p><strong>டிரம்ப்பின் போர்வெறி ஆதிக்கத்தை ஆதரிக்க உச்சி மாநாடு</strong></p> <p>வாஷிங்டன்,மார்ச் 9- அமெரிக்காவின் மேலாதிக் கத்தையும் போர் வெறியையும் ஆதரிக்கும் வகையில் மார்ச் 7 &nbsp;சனிக்கிழமையன்று புளோரிடா வின் மியாமி நகரில் அமெரிக்கா வின் கேடயம் (Shield of the Americas) என்ற பெயரில் உச்சி மாநாடு ஒன்று நடந்துள்ளது. &nbsp;டிரம்ப்பின் அடிவருடியான அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேய், எல் சால்வடார், ஈக்வடார், கோஸ்டாரிக்கா, டொமி னிகன் குடியரசு, &nbsp;பனாமா, பராகு வே, பொலிவியா, ஹோண்டுராஸ், கயானா, டிரினிடாட், டொபாகோ ஆகிய &nbsp;12 நாடுகளின் &nbsp;தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். &nbsp;மெக்சிகோ, கொலம்பியா, பெரு, பிரேசில், வெனிசுலா, உரு குவே, குவாதமாலா, நிகரகுவா போன்ற லத்தீன் அமெரிக்காவின் பிற &nbsp;முக்கிய நாடுகள் இந்த மாநா ட்டில் கலந்துகொள்ளவில்லை. &nbsp;அமெரிக்க &nbsp;போர்த்துறை செய லாளர் பீட் ஹெக்செத் &nbsp;இம்மாநாடு குறித்து பேசிய போது மன்றோ கோட்பாட்டை டிரம்ப் &nbsp;மீண்டும் நிலைநாட்டியுள்ளார். மேற்கோ ளத்தில் உள்ள நாடுகளின் மீது &nbsp;அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்கும் என கூறியுள்ளார். வட அமெரிக்கா, தென் அமெ ரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி கொள்ளையடிப்பதற்காக 1823 இல் அமெரிக்கா மன்றோ &nbsp;கொள்கையை முன்வைத்தது. சமீப ஆண்டுகளில் அமெரிக்கா வுக்கு மாற்றாக சீனாவின் பொரு ளாதார வர்த்தக உறவுகள் இந்த நாடுகளுடன் அதிகரித்துள்ளது. &nbsp;இந்தச் சூழலில் தான், அந்நாடு களின் மீதான ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்க டிரம்ப், மன்றோ கோட்பாட்டிற்கு &nbsp;&ldquo;டான்ரோ கோட்பாடு&rdquo; என்று மறுபெயரிட்டார். &nbsp; இதன் பின்னணியில் சீனா வின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் &nbsp;தென் அமெரிக்க நாடுகள் சீனாவுடன் மேற்கொள்ளும் &nbsp;வர்த்த கத்தை குறைக்க வைப்பதையும் &nbsp;நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.