முந்தய பக்கம்

கோடைக்கால சிறப்புத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்!

19 Feb 2026, 3:09 pm
கோடைக்கால சிறப்புத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்!
<p><strong>கோடைக்கால சிறப்புத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்!</strong></p> <p>சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு சென்னை, பிப். 19 - இடைக்கால நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, &rdquo;தேர்தல் வரவிருப்பதாலேயே, கோடைக்கால சிறப்புத்தொகை உடன் சேர்த்து ரூ. 5000 இரவோடு இரவாக வரவு வைக்கப்பட்டுள்ளது&rdquo; என்றார். இதற்குப் பதிலளித்துப் பேசிய சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், &rdquo;கோடைக்காலத்தில் மக்களுக்கு மருத்துவச் செலவு வரலாம் என்பதால் ரூ. 2,000 கொடுக்கப்பட்டது, மகளிர் உரிமைத் தொகைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்தச் சூழ்ச்சியை திமுக அரசு முறியடித்துள்ளது&rdquo; என்றார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உடன், இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram