கோடை விடுமுறை இன்றுடன் நிறைவு: இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
2 Jun 2026, 8:56 pm

கோடை விடுமுறை இன்றுடன் நிறைவு: இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு

திருநெல்வேலி, ஜூன் 2- கோடை விடுமுறை இன்று புதன் கிழமையுடன் நிறைவுபெறும் நிலை யில் நெல்லை மாவட்டத்தில் நான்காம் தேதி பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இந்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றதால் பள்ளிக ளுக்கு கடந்த கல்வி ஆண்டில் பொ துத் தேர்வுகள் முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டன.

மேலும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க இருந்த நிலை யில் வெயில் தாக்கம் நீடிப்பதால் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப் படும் என புதிய அரசு அறிவித்து இருந்தது.

இதன்படி சுமார் 50 நாட்களுக்கு மேல் நீடித்த கோடை விடு முறை நாளை ஜூன் மூன்றாம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது.

இதைத் தொடர்ந்து அறிவித்தபடி ஜூன் 4ஆம்தேதி பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அனை த்து வகையான பள்ளிகளை திறக்க வும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுரைப்படி முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் ஏற்பாட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகளில் பழுதுகள் சரிபார்த்து வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் கோடை விடுமுறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பள்ளி வாகனங்கள், ஆர்டிஓ அலுவலக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.

பெரும்பாலான பள்ளிக ளில் புதிய மாணவர்கள் சேர்க்கை யும் நிறைவு பெற்றுள்ளது.

ஒன்று முதல் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் தேவை யான இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலை யில் உள்ளன

. இவற்றை பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் தலைமை ஆசி ரியர் முன்னிலையில் சரி பார்த்து ஒழுங்கு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர்.

கோடை விடுமுறை நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் நெல்லையில் உள்ள பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வந்து குவிந்துள்ளன.

பராமரிப்பு போன்றவை மீண்டும் சரிபார்த்து பள்ளி வளாகத்தை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் ஆலோ சனை வழங்கியுள்ளார்.

மேலும் மாணவர்கள் சீருடை அணிந்து வரு வதை உறுதி செய்யவும் அறிவுறுத்தி யுள்ளார்.

பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பழைய பஸ் பாசை காட்டி பஸ்களில் இலவசமாக பய ணிக்கவும் உத்தரவுகள் வழங்கப் பட்டுள்ளன.

நான்காம் தேதி பள்ளி திறப்பு நாளில் இலவச பாட புத்த கங்கள் மாணவர்களுக்கு வழங்கப் பட உள்ளன.

மேலும் அன்றைய தினமே மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

இந்த ஆண்டு 1 முதல் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி புத்த கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் எளிதில் அறிந்து புரிந்து படிக்கும் வகையில் அனை த்து பக்கங்களிலும் வண்ண படங்க ளுடன் பாட புத்தகங்கள் தயாரிக்கப் பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப் பட்டுள்ளது.