தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுட்டெரிக்கும் கோடை வெயில் கயிற்றுக் கட்டிலுக்கு திரும்பும் மக்கள்

7 May 2026, 1:56 am
சுட்டெரிக்கும் கோடை வெயில்  கயிற்றுக் கட்டிலுக்கு திரும்பும் மக்கள்

சுட்டெரிக்கும் கோடை வெயில் கயிற்றுக் கட்டிலுக்கு திரும்பும் மக்கள்

தமிழகம் முழுவதும் கோடை வெயில் தற்போதே உச்சத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக, கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) தொடங்கியுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெயிலின் தாக்கம் இன்னும் கடு மையாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

மேற்கு மண்டல மாவட்டங்களான ஈரோடு, நாமக் கல் மற்றும் கோவையில் வெப்பத் தின் அளவு நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது.

வெப்பத்திலிருந்து தற்காத் துக் கொள்ள பொதுமக்கள் இள நீர், நுங்கு என இயற்கை பானங் களை நாடிச் சென்றாலும், இரவு நேரங்களில் நிம்மதியான உறக் கத்தைப் பெறுவது பெரும் சவா லாகவே உள்ளது.

நவீன கால ஏசி மற்றும் ஏர் கூலர்கள் ஒருபுறம் இருந்தாலும், உடல் ஆரோக்கி யத்தையும் இயற்கையான குளிர்ச்சியையும் விரும்புவோர் தற்போது பாரம்பரிய ’கயிற்றுக் கட்டில்களை’ நோக்கித் திரும்பி யுள்ளனர். முன்பு கிராமப்புறங்களின் அடையாளமாக இருந்த கயிற்றுக் கட்டில்கள், இன்று நகரவாசிக ளின் விருப்பமான பொரு

ளாக மாறியுள்ளன.

ஈரோடு - சேலம் சாலையில் கயிற்றுக் கட்டில் தயா ரிப்பில் ஈடுபட்டு வரும் சிவனே சன் இது குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல்கள் சுவாரஸ்ய மானவை.

ஆரம்ப காலங்களில் வட மாநிலங்களில் அதிகம் புழக் கத்தில் இருந்த இந்த பாரம்பரி யக் கட்டில்கள், தற்போது தமிழ கத்தின் அனைத்துப் பகுதிகளி லும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

உறுதியான மரக்கட்டைகளை ஆசாரிகள் மூலம் கால்களாக வடி வமைத்து, அனுபவம் வாய்ந்த கலைஞர்களைக் கொண்டு கயிறு களை இறுக்கமாகப் பின்னி இவற்றை உருவாக்குகிறோம், என்றார்.

தற்போது சந்தையில் தரத் தைப் பொறுத்து ரூ. 2,500 முதல் ரூ. 10,000 வரை கயிற்றுக் கட்டில் கள் விற்பனை செய்யப்படுகின் றன.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வண்ணங்களிலும், நவீன டிசைன் களிலும் இவை தயார் செய்து தரப்படுகின்றன. வ

ருடம் முழுவ தும் சீரான விற்பனை இல்லை யென்றாலும், கோடை காலத்தில் இதன் விற்பனை களை கட்டும்.

இரும்பு மற்றும் மரக்கட்டில் களைப் பயன்படுத்தும்போது அவை வெப்பத்தை உள்வாங்கி உடல் உஷ்ணத்தை அதிகரிக்கின் றன.

இதனால் முதுகுவலி மற்றும் தூக்கமின்மை போன்ற உபாதை கள் ஏற்படுகின்றன.

ஆனால், கயிற்றுக் கட்டிலில் படுக்கும் போது கட்டிலின் அடியில் இருந்து காற்று தடையின்றி ஊடுருவுவ தால் உடல் குளிர்ச்சியாக இருக் கும்.

உடல் வலி நீங்குவதோடு, முதுகுத்தண்டுக்கும் சரியான பிடி மானம் கிடைக்கிறது. தோட்டம் அல்லது மர நிழலில் கயிற்றுக் கட்டிலை இட்டு உறங்குவது தனி சுகம்.

கயிற்றுக் கட்டிலின் மகத்து வத்தை உணர்ந்த நகரப் பகுதி மக்கள், நீண்ட தூரம் பயணித்து வந்து இவற்றை வாங்கிச் செல் கின்றனர்.

நெடுஞ்சாலைகளில் காரில் செல்பவர்கள் கூட, கடை யைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி, கட்டிலை வாங்கி காரின் மேற்கூரையில் கட்டிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

வெளி மாவட்டங்களில் இருந்தும் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப இவை விநி யோகம் செய்யப்படுகின்றன.

நவீன வசதிகள் பெருகினா லும், ஆரோக்கியம் என்று வரும் போது இயற்கை வழிமுறைகளே சிறந்தது என்பதற்கு இந்த கயிற் றுக் கட்டில்களின் மீள்வருகையே சாட்சி.

இந்த வெயில் காலத்தில் செயற்கை குளிரூட்டிகளை விட, இயற்கையோடு இணைந்த கயிற்றுக் கட்டில்கள் பொது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. - எம்.பிரபாகரன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.