கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க வழிகாட்டுதல்கள்!
28 May 2026, 9:45 pm

கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க வழிகாட்டுதல்கள்!

சென்னை, மே 28 - தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கும்படி சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெயிலினால் உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைந்து தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படலாம் என மாநகராட்சி எச்சரிக்கிறது.

குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர் அதிகம் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல் வெளியே செல்லும்போது தலையில் துண்டு அல்லது தொப்பி அணிந்து குடை பயன்படுத்த வேண்டும்.

அடிக்கடி தண்ணீர், மோர், இளநீர், ஓ.ஆர்.எஸ். கரைசல் பருக வேண்டும்.

தளர்ந்த பருத்தி ஆடைகள் அணிவது நல்லது. பகலில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல்களை திரைச்சீலைகளால் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர்க்க வேண்டியவை யாரேனும் மயக்கமடைந்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவரை ஒரு பக்கமாக படுக்க வைத்து உடைகளை தளர்த்தி குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும்.

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கக்கூடாது என்று மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பிற மருத்துவமனைகளில் 1.34 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் 57 வீடற்றோர் காப்பகங்களில் தங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.