தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோடைக்கால பயிற்சி வகுப்புகள் அறிவை வளர்க்கவா? குழந்தைகளின் விடுதலையைப் பறிக்கவா?

13 May 2026, 11:10 pm
கோடைக்கால பயிற்சி வகுப்புகள் அறிவை வளர்க்கவா? குழந்தைகளின் விடுதலையைப் பறிக்கவா?

கோடைக்கால பயிற்சி வகுப்புகள் அறிவை வளர்க்கவா? குழந்தைகளின் விடுதலையைப் பறிக்கவா?

பள்ளிப் பருவத்தின் ஆகச் சிறந்த இனிமை ‘கோடை விடுமுறை’.

பத்து மாத கால புத்தகச் சுமை, தேர்வுக் கவலை என ஓயாது ஓடிய மூளைக்கும் உடலுக்கும் ஆசுவாசம் தரும் மருந்தாகவே இந்த விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

ஆனால், இன்றைய எந்திரத்தனமான உல கில், அந்த விடுதலையைக்கூட வணிக நிறுவனங்களும், சில பெற்றோர்களும் திட்டமிட்டுப் பறித்து வருவது கவலையளிக் கிறது.

முன்பெல்லாம் விடுமுறை என் றாலே பாட்டி வீடு, உறவினர்களு டனான சந்திப்பு, மாலை நேரத்து மண் விளையாட்டு என உறவுச் சங்கிலி பலப்படும் காலமாக இருந் தது.

ஆனால், இன்று பெற்றோர்க ளிடம் குழந்தைகளுடன் பேசவோ, விளையாடவோ போதிய நேரமில்லை.

இதனால் குழந்தை கள் வீட்டில் முடங்குவதும், மொபைல் கேம்களில் மூழ்குவ தும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, காளான்கள் போல முளைத்துள்ளன ‘கோடைக் கால சிறப்புப் பயிற்சி வகுப்பு கள்’.

கலைகளின் பெயரால் ஒரு காகிதப் போர் ஓவியம், நடனம், நீச்சல், பேட் மிட்டன் எனப் பல பெயர்களில் இந்த வகுப்புகள் நடைபெறு கின்றன.

ஆனால், இவை உண்மை யில் குழந்தைகளின் ஆர்வத் திற்காகத் தொடங்கப்பட்ட வையா? அல்லது பெற்றோர்க ளின் வசதிக்காகத் தொடங்கப் பட்டவையா? என்பது கேள்விக் குறியே.

குழந்தைகளை கண் காணிக்க வேண்டிய பொறுப்பை தவிர்க்கவும், அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்கிற மன நிறைவை அடையவும் பல பெற் றோர்கள் குழந்தைகளை இத் தகைய வகுப்புகளில் தள்ளுகின்ற னர்.

இதனை ஒரு வணிக வாய்ப் பாகக் கருதும் நிறுவனங்கள், ‘சிறப்புச் சலுகை’ என்ற பெயரில் பெற்றோர்களை ஈர்த்து, பெரும் தொகையைக் கட்டணமாகப் பறிக்கின்றன.

மேலோட்டமாக பார்த்தால் இது எதிர்கால நலன் சார்ந்தது போலத் தெரிந்தாலும், குழந்தைகளுக்கான இயல்பான கூட்டுச் சேர்க்கையையும், உறவு சார்ந்த புரிதல்களையும் இது சிதைத்து வருகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட் டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் ரமேஷ் கூறு கையில், பள்ளிக்குச் சென்று சோர் வுடன் திரும்பும் குழந்தைகளுக்கு விடுமுறை என்பது வெப்பத்திலி ருந்து தற்காத்துக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் வழங்கப்படு வது.

நீச்சல் போன்ற அத்தியாவ சியக் கலைகளை கற்றுத் தரு வது தொழில் ரீதியாக எனக்குப் பலன் என்றாலும், பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரின் வற் புறுத்தலாலேயே ஆர்வமின்றி வருகின்றனர் என வேதனை தெரி விக்கிறார்.

ஒவ்வொரு குழந்தையி டமும் ஒரு தனித்திறமை ஒளிந்தி ருக்கும்.

அதை அவர்கள் தாங்க ளாகவே கண்டறியும் சுதந்தி ரத்தை நாம் வழங்க வேண்டும்.

அவர்களுக்குத் தேவையானது 24 மணி நேரமும் இயங்கும் பயிற்சி வகுப்புகள் அல்ல; பெற்றோரின் அரவணைப்பும், அவர்கள் விரும் பும் விளையாட்டுச் சுதந்திரமுமே ஆகும்.

எனவே, பெற்றோர்களே! குழந்தைகளை வெறும் ‘மார்க் வாங்கும் இயந்திரங்களாகவோ’ அல்லது ‘சான்றிதழ் சேகரிக்கும் பெட்டிகளாகவோ’ மாற்றாதீர்கள்.

அவர்கள் விருப்பப்பட்டால் மட் டுமே பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புங்கள். மற்ற நேரங்களில் அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள்.

ஏனெனில், விடுமுறை என்பது பாடங்களைக் கடந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள் ளும் பொற்காலம்! - எம்.பிரபாகரன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.