பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திடுக: மாதர் சங்கத்தினர் ஆவேசம்
27 May 2026, 11:42 pm

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திடுக: மாதர் சங்கத்தினர் ஆவேசம்

கோவை, மே 27- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப் பான சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலி யுறுத்தி சூலூரில் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சிறுமியின் உயிரைப் பறித்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண் கள் மற்றும் குழந்தைக ளுக்கு பாதுகாப்பான சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள் மற் றும் பொதுஇடங்களில் பாது காப்பு கண்காணிப்பை தீவி ரப்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் செவ்வாயன்று சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ. உஷா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா கண்டன உரையாற்றினார். மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.பவித்ராதேவி சிறப்பு ரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கள் எஸ். ராஜலட்சுமி, எம்.அமுதா, மாவட்டப் பொருளாளர் கே.தங்கமணி, மாவட்ட நிர் வாகிகள் எஸ். சாமுண்டீஸ்வரி, என். லதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் சிறுமி கொடூர மான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக்கை ஜூன் 5 ஆம் தேதி வரையிலும், மோகன்ராஜை மே 27 ஆம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் வைக்க சூலூர் குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து மோகன்ராஜ் புதனன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேர்நிறுத்தப்பட் டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மோகன்ராஜின் நீதிமன்ற காவலை ஜூன் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடை யவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பரிந்துரை செய்ததின் அடிப்படையில், கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத் தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத் தரவிட்டுள்ளார்.