தாய்க்கு தெரியாமல் சிறுமியின் உடல் எரியூட்டல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்
25 May 2026, 9:32 pm

தாய்க்கு தெரியாமல் சிறுமியின் உடல் எரியூட்டல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்

சென்னை, மே 25 - சூலூரில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை, அவரது தாயாருக்கு தெரிவிக்காமல் எரியூட்டிய சம்பவத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டுமென அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிர மிளா, மாநில பொதுச் செய லாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், அவரது தாயாருக்குத் தெரியாமல் அவசரமாக எரியூட்டப்பட்டதாக சிறுமி யின் தாயார் அளித்துள்ள பேட்டி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை இழந்த தாய்க்கு, தனது குழந்தை யின் உடலை இறுதியாகக் கூட பார்க்க முடியாத நிலை உருவாக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயல்.

சட்ட நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ பரிசோ தனைகள் முடிந்த பின்னரும், தாயின் ஒப்புதல் மற்றும் தக வல் இல்லாமல் உடலை எரி யூட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் கவ லைக்குரியது.

இது காவல்துறையின் கடுமையான அலட்சியமும் அதிகார துஷ்பிரயோகமும் ஆகும்.

பாதிக்கப்பட்ட தாயின் உணர்வுகளையும் உரிமை களையும் மதிக்காமல் நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.

இச்சம் பவம் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

எனவே சிறுமி யின் உடல் எரியூட்டப்பட்ட சூழ்நிலை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண் டும்.

குடும்பத்தினரின் அனு மதி பெறப்பட்டதா, சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் அலட்சியம் அல்லது விதி முறை மீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களில் காவல்துறை மனிதாபிமானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் வகையில் தெளிவான நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண் டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண் டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.