சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் மீது தாக்குதல்
13 Aug 2026, 9:30 pm

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் மீது தாக்குதல்

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் உள்ளது தக்த் ஸ்ரீ ஹசூர் சாகிப் குருத்வாரா. இது நாட்டின் பிரசித்திப் பெற்ற குருத்வாரா ஆகும்.

இந்நிலையில், குருத்வாராவில் வியாழனன்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான சுக்பீர் சிங் பாதல், தனது மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சிமிரத் கவுர் பாதல் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வருகை தந்தார். குருத்வாராவை விட்டு வெளியேறும் போது, நிஹாங் சீக்கியர் (ஆயுதங்களுடன் இருப்பவர்கள்) ஜஸ்பால் சிங் என்பவர் பாதலை கிருபானால் (வாள்) தாக்கினார். இந்த தாக்குதலில் சுக்பீர் சிங் பாதல், பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் காயமடைந்தனர். வலது கையில் காயமடைந்த பாதல் நாந்தேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.