கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
27 Mar 2026, 3:15 pm

பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்திய நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு தருமபுரி, மார்ச் 27- தேர்தல் பிரசாரத்தில் பள்ளி சிறுவர்களை ஈடு படுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளர் மீது காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் பென் னாகரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோ.பழனி யம்மாள், கடந்த மார்ச் 16 ஆம் தேதியன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பள்ளி சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலகத் தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், பென்னாகரம் வட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர் அய்யாவு, பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பழனியம்மாள் மீது வியாழனன்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை வனப்பகுதியில் விடுவிப்பு கோபி, மார்ச் 27- கோபிசெட்டிபாளையம் அருகே கிராமங்களுக் குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதை தொடர்ந்து, அதனை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்த னர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதியை யொட்டி உள்ள விளாங்கோம்பை, குண்டேரிப்பள் ளம் அணை, வினோபா நகர், குன்னாங்கரடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இரவு நேரங்களில் சிறுத்தை உலவி வந்தது. இந்த சிறுத்தை குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியையொட்டி உள்ள விவசாயத் தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டி ருந்த கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந் தது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் சிறுத் தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியு றுத்தி வந்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க டி.என்.பாளையம் வனத்துறையினர் கடந்த சில மாதங் களுக்கு முன் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் கூண்டு வைத்தனர். ஆனால், சிறுத்தை தொடர்ந்து இடம் மாறிமாறி போக்கு காட்டி வந்தது. டி.என்.பாளை யம் வனச்சரகர் ஜான்பீட்டர் தலைமையில் வனத்துறை யினர் தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதி யில் மூர்த்தி என்பவரது விவசாயத் தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை வியாழனன்று சிக்கியது. இதையடுத்து அந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட முடிவு செய்தனர். அப்போது சிறுத்தைக்கு பின்பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி வன கால்நடை மருத்துவரால் சிறுத்தைக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.

மலைப்பாதையில் சரக்கு வாகனம் விபத்து: 3 பேர் படுகாயம் ஈரோடு, மார்ச் 27- பர்கூர் மலைப்பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் படுகாயம டைந்தனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த தினேஷ் (18), ராஜு (29), பாலாஜி (18) ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மூவரும் ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை கொங்காடை சாலையின் ஓரத்தில் வெள்ளை கோடு வரையும் பணி யில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பணி முடிந்து வியாழனன்று மாலையில் சரக்கு வாகனத்தில் திரும்பியபோது, மணியாச்சி பள்ளம் அருகே உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பக்கவாட் டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம டைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து பர்கூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனை கொலை செய்த நபரை கொலை செய்த தம்பதி கைது ஈரோடு, மார்ச் 27- தாளவாடி அருகே மகனை அடித்துக் கொலை செய்த நபரை, கல்லால் தாக்கி கொலை செய்த தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த தொட்ட காஜனூரை சேர்ந்தவர் மாதேவப்பா -தொட்டம்மா தம்பதி. இவர்களது மகன் ராகவன் (11) மற்றும் உற வினர் சிக்கம்மா ஆகியோரை, அதே கிராமத்தை சேர்ந்த நாகேஷ் (32) என்பவர் கடந்தாண்டு சுத்திய லால் தாக்கி கொலை செய்தார். இதைத்தொடர்ந்து நாகேஷை தாளவாடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, நாகேஷ் ஜாமீ னில் அண்மையில் வெளியே வந்தார். இதைத்தொ டர்ந்து நாகேஷ், உறவினர்களை பார்ப்பதற்காக தொட்டகாஜனூருக்கு கடந்த மார்ச் 24 ஆம் தேதி வந் தார். அப்போது அங்கிருந்த மாதேவப்பா, அவரது மனைவி தொட்டம்மா ஆகியோர் நாகேஷ் வருவதை பார்த்து ஆத்திரமடைந்தனர். இதன்பின் இருவரும் சேர்ந்து நாகேஷை கல்லால் தாக்கியதாக கூறப்படு கிறது. இதில் காயமடைந்த நாகேஷை காவல் துறை யினர் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுதொடர்பாக தொட்டம்மா, மாதேவப்பா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை உதகை, மார்ச் 27- பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய வழியில், வலுக் கட்டாயமாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 40 வயது பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகி றார். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பானிபூரி கடையில் வேலை செய்து வந்த அந்தப் பெண், தினசரி காலை 10 மணிக்கு வேலைக்கு வந்துவிட்டு, இரவு 8 மணிக்குமேல் பணி முடிந்து வீடு திரும்புவார். இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டி ருந்தார். அப்போது மான்பூங்கா தனியார் பள்ளி பகுதியில் சென்றபோது, இளைஞர் ஒருவர் வழிமறித்து அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆள் நட மாட்டம் இல்லாத பகுதி என்பதால், கூச்சலிட்டும் யாரும் உத விக்கு வரமுடியவில்லை. இதற்கிடையே அந்தப் பெண் போராடி பார்த்தும், தப்பிக்க முடியவில்லை. தொடர்ந்து, பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து அந்த பெண் செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத் தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் சதீஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி செந்தில் குமார், குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகினார்.

ஏப்.1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி தருமபுரி, மார்ச் 27- தருமபுரியில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப்.1 ஆம் தேதி முதல் துவங்குகிறது. தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில், 5 கட்டங்களாக நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள், பொது மக்கள் நீச்சல் குள அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பத்துடன் ரூ.1,770 பயிற்சி கட்டணத்தை இணையம் வாயிலாகவோ, பிஓஎஸ் இயந்திரம் வாயிலாகவோ செலுத்தி, நீச்சல் குளத் தில் ஒப்படைக்க வேண்டும். முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஏப்.1 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு ஏப்.17 முதல் 22 ஆம் தேதி மற்றும் ஏப்.24 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3 ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 5 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரையிலும், 4 ஆம் கட்ட பயிற்சி மே 17 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும், 5 ஆம் கட்ட பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்புகள் நாள் தோறும் காலை 7 முதல் 8 மணி வரையிலும், 8 முதல் 9 மணி வரையிலும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 5 வரை பின்னர் 5 முதல் 6 வரையிலும் நடைபெறவுள்ளது.

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தற்கொலை முயற்சி!

சேலம், மார்ச் 27 – கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வந்த பெண், தனது 5 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற் கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத் தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த வர் சொர்ணா. இவருக்கும் இவரது கண வர் குடும்பத்தினருக்கும் இடையே ஏற் பட்ட குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப் படுகிறது. கணவர் குடும்பத்தினர் தனக்கு கடும் நெருக்கடி அளிப்பதாக குற்றம் சாட்டிய சொர்ணா, தன்னை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக் கக்கோரி கடந்த வாரம் இரண்டு நாட்க ளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்து, செய்தியா ளர்களிடம் தனது நிலையை விளக்கி யிருந்தார். இந்நிலையில், வெள்ளியன்று காலை சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்ற சொர்ணா, அங்கு தனது புகார் குறித்து முறை யிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரை முறையாக கவ னிக்காமல் மிரட்டியதாக கூறப்படு கிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த சொர்ணா, காவல் நிலை யத்தை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், மனமுடைந்த சொர்ணா, தனது 5 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள் ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இது குறித்து சொர்ணாவின் வழக் கறிஞர் கூறுகையில், ”நீதி கேட்டு போராடிய பெண்ணை காவல்துறை யினர் மிரட்டியதே இந்த தற்கொலை முயற்சிக்கு முக்கியக் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணையும் குழந்தையையும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜாத்தி, அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க ஓமலூர் தாலுகா செயலா ளர் மகேஸ்வரி ஆகியோர் நேரில் சந் தித்து நலம் விசாரித்தனர். மேலும் கருப்பூர் காவல் நிலையத்தில் உறவி னர்களுடன் சென்று பிரச்சனை குறித்து கேட்டறிந்தனர்.