தொடர் விபத்தை ஏற்படுத்தும் கரும்பு லாரிகள்
7 Feb 2026, 5:37 pm
<p><strong>தொடர் விபத்தை ஏற்படுத்தும் கரும்பு லாரிகள்</strong></p>
<p>நாமக்கல், பிப்.7- காவேரி ஆர்.எஸ் பகுதி அருகே அதிக கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, எதிர்பாராத வித மாக கடை ஒன்றில் மோதி விபத்தக் குள்ளானது. இதில் ஒருவர் உயிரி ழந்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் - திருச்செங்கோட்டை இணைக்கும் இடத்தில் காவேரி ஆர். எஸ் பகுதி உள்ளது. தனியார் காகித ஆலை மற்றும் தனியார் கரும்பு ஆலை இந்த பகுதியில் அமைந்துள்ளன. இங்கு அதிகளவு கரும்பு பாரம் மற்றும் காகிதம் தயா ரிக்க தேவைப்படும் மூலப் பொருட் களை ஏற்றிக்கொண்டு கனரக வாக னங்கள் அடிக்கடி இந்த சாலையில் வருவது வழக்கம். இங்குள்ள வேகத் தடைகளில் ஏறி இறங்கும் பொழுது, பாரம் தாங்காமல் கரும்பு கட்டுகள் அப்படியே சாலையில் சரிந்து விடு கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் பல்வேறு பிரச்சனைக ளும் எழுந்து வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று மாலை எடப்பாடியில் இருந்து ஓடப் பள்ளியில் செயல்படும் தனியார் சர்க் கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது. அப்பொழுது காவேரி ஆர். எஸ் பகுதி அருகே வளைவில் திரும்புவதற்கு முன்பாக எதிர்பாராத விதமாக டெய்லர் கடை ஒன்றுக்குள் சுவற்றை உடைத்துக் கொண்டு லாரி நின்றது. இதில் அப்பகுதியில் முழுவ தும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகினர். இதில் கடையில் இருந்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படு காயம் அடைந்தவர்களை மீட்டு முத லுதவி சிகிச்சைக்காக பள்ளிபாளை யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கால்கள் நசுங்கிய நிலையில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் நைனாமலை செட்டியார் என்பவர் உயிரிழந்தார். பாரம் அதிகமாக உள்ளதால் நிலை தடுமாறும் வாகனங்களை கட்டுப்படுத்த இயலாமல் அதன் ஓட்டுநர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு இடத்தில் விபத்தை ஏற்படுத்தி விடு கின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் உரிய கண்காணிப்பை மேற் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவுக ளில் மட்டுமே கரும்பு கட்டுகளை ஏற் றுக்கொண்டு வரவேண்டும். அதனை யும் மீறி செயல்பட்டால் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நட வடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்து சம்பவங்கள் தவிர்க்கப்படும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p>
