2026-27 பருவ கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.95 மட்டுமே உயர்வு! தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம்
9 May 2026, 9:52 pm

2026-27 பருவ கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.95 மட்டுமே உயர்வு! தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை, மே 9 - 2026-27 ஆம் ஆண்டு பருவ கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 95 ரூபாய் மட்டுமே உயர்த்தி, ஐந்து கோடி கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக சங்கத்தின் மாநில பொ துச் செயலாளர் டி.ரவீந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு 2026-27 ஆம் பருவத்திற்கு 10.25 சதவீதம் பிழிதிறன் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,650 விலையாக அறிவித்துள்ளது. 9.5 பிழிதிறன் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,383 குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2025-26 நடப்பு கரும்பு பருவத்திற்கு 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,550, 9.5 சதவீதம் பிழிதிற னுக்கு ரூ.3,290 விலையை ஒன்றிய அரசு அறி வித்தது.

கடந்த ஆண்டை விட ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய பாஜக அரசு வெறும் 95 ரூபாய் மட்டுமே விலையை உயர்த்தி யுள்ளது.

உரம், டீசல் விலைகள் உயர்ந்து கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில் ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.5,500 வழங்க வேண்டும். ஆனால் நாடு முழுவதும் உள்ள 5 கோடி கரும்பு விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பற்றி கவலைப்படாமல் அடுத்த ஆண்டு கரும்புக்கு ஒன்றிய பாஜக அரசு ஒரு டன்னுக்கு வெறும் ரூ.95 மட்டுமே விலையை உயர்த்தியுள்ளதை தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது.

சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, உற்பத்தி செலவை கணக்கிட்டு அதோடு 50 சதவீதம் சேர்த்து சி2+50 விலை வழங்ப் படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறி வித்தது.

கடந்த 10 ஆண்டு காலமாக சாமிநா தன் குழு பரிந்துரையை அமல்படுத்த வில்லை.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று சொன்னார் கள்; கடனை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள்; ஆனால் எதையும் அமல் படுத்தவில்லை.

மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளால், வேளாண் நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கரும்பு ஓர் ஆண்டு பயிர் என்பதை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,500 விலை அறிவித்து வழங்க வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள மாநில அரசு கரும்பு க்கு பரிந்துரை விலையை அறிவித்து, கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.