தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் கரும்புகள்

11 Dec 2025, 5:47 pm
பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் கரும்புகள்
<p><strong>பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் கரும்புகள்</strong></p> <p>தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக தைப்பொங்கல் திருநாள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, கரும்பு ஆகியவை வழங்குவது வழக்கம். மேலும் தமிழக அரசு பொங்கல் கரும்புகளை ஆங்காங்கே அருகாமை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், கரும்புகளை அறுவடை செய்வதற்கான ஆயத்தப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், சமய &nbsp;சங்கிலி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும் பொழுது, &nbsp;பள்ளிபாளையம் ஒன்றியத் துக்குட்பட்ட சமய சங்கிலி, கலியனூர், பல்லக்காபாளையம், பாப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 200 ஏக்கரில் பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் பயிரிடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டுமே தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பாகவே எங்கள் விவசாய நிலத்திற்கு வருகை தந்து தமிழக அரசு நிர்ணயித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும், பொங்கல் கரும்பின் உயரம் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கொள்முதல் செய்வது வழக்கம். மேலும் வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பொங்கல் பண்டிகையை ஒட்டி சாலையோரத்தில் கடை அமைப்பதற்காக கரும்புகளை வாங்கிச் செல்வர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட பொங்கல் கரும்புகள் தற்போது 90 சதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜனவரி மாதத்தின் துவக்க வாரத்தில் கரும்புகள் அறுவடை செய்யும் பணி துவங்க உள்ளது. எனவே அறுவடை பணிகளுக்கான ஆயத்தப் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு ஆண்டுமே கரும்புகளை வாங்க வருகை தரும் வெளி வியாபாரிகள், இந்த வருடமும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். &nbsp;அதேபோல அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை ஆங்காங்கே உள்ள கரும்பு விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்து அதை குடும்ப அட்டைதாரருக்கு வழங்கினால் அரசுக்கும் தேவையற்ற வாகன எரிபொருள் செலவு, எங்களுக்கும் சிரமமும் குறையும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆட்கூலி, வண்டி வாடகை, கரும்பு பராமரிப்பு, அதற்கான உரங்கள் உள்ளிட்டவற்றின் செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசு கரும்புக்கு நிர்ணயிக்கும் தொகையை பொறுத்து கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கவும் யோசித்து வருகிறோம். காவிரிக்கரை ஓரப்பகுதிகளாக விவசாய நிலங்கள் உள்ளதால் கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்து உள்ளது. இவ்வாண்டு சிறப்பான முறையில் கரும்பு வியாபாரம் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதேபோல தைப்பொங்கல் திருநாளை ஒட்டி கரும்புக்கு அடுத்தபடியாக மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகளும் தற்போது தைப்பொங்கல் திருநாளை எதிர்நோக்கி அறுவடை பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. - எம்.பிரபாகரன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.