தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு ஜோடி ரூ.150 வரை விற்பனை

13 Jan 2026, 3:17 pm
திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு ஜோடி ரூ.150 வரை விற்பனை
<p><strong>திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு ஜோடி ரூ.150 வரை விற்பனை</strong></p> <p>திருப்பூர், ஜனவரி 13- திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்காக திங்களன்று கரும்பு ஜோடி ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகின்றது. &nbsp;பொங்கல் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 15 ஆம் தேதி &nbsp;கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனை தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் &nbsp;பல்வேறு பகுதிகளில் கரும்புகள் அடுக்கி வைக்கப்பட்டு கண் கவர் காட்சியாக உள்ளன. சேலம், மேட்டூர், கிருஷ்ணகிரி, மதுரை, ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட &nbsp;மாவட்டங்களில் இருந்து பெருமளவு கரும்புகள் விற்பனைக் காக இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. திருப்பூர் நகரின் தென் னம்பாளையம், கோவில்வழி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரிகள் நாள் முழுவதும் விற்பனை யில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாண்டு கரும்புகளின் விலை கடந்த ஆண்டை விட &nbsp;சற்று அதிகரித்துள்ளது. ஒரு ஜோடி கரும்பு ரூ.120 முதல் &nbsp;ரூ.150 வரையிலும், பத்துக் கரும்புகள் கொண்ட கட்டு ரூ.500 &nbsp;முதல் ரூ.800 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த &nbsp;ஆண்டு ஒரு ஜோடி ரூ.100 முதல் ரூ.120 வரை மட்டுமே விற்ப னையானது. இந்த விலை உயர்வு பற்றி வியாபாரிகள் தெரிவிக்கை யில், இந்த ஆண்டு பருவமழை மாறுபாடு காரணமாக கரும்பு &nbsp;சாகுபடி குறைந்துள்ளதையும், அறுவடை தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வையும் முக்கிய காரணங் களாகச் சுட்டிக்காட்டினர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து கரும்புகளை ஏற்றி வரும் போக்குவரத்து வாடகை யும் கூடுதலாகி உள்ளதாக குறிப்பிட்டனர். பொங்கல் பண்டி கைக்கான பிற முக்கிய பொருட்களான ஆவாரம்பூ, வேப் பிலை ஆகியவையும் சந்தைகளில் காணப்படுகின்றன. இந்த &nbsp;பூக்கள் கட்டு ஒன்றுக்கு ரூ.20க்கு விற்கப்படுகின்றன. பொங் கல் பானையில் கட்டப்படும் மஞ்சள் கொத்துக்கள் ஜோடி &nbsp;ரூ.50க்கு விற்பனை ஆகின்றன. திங்கள்கிழமை வியாபாரம் &nbsp;ஓரளவு நடந்த நிலையில், செவ்வாய் மற்றும் புதன் முக்கிய &nbsp;விற்பனை நாட்களாகக் கருதப்படுவதால், அன்று கரும்பு &nbsp;வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் &nbsp;விலைகள் சற்றுக் குறையக்கூடும் என தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.