சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி துவக்கம்
15 Dec 2025, 2:48 pm
<p><strong>சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி துவக்கம்</strong></p>
<p>தருமபுரி, டிச. 15 – தருமபுரி மாவட்டம், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அர வைப் பணியை ஆட்சியர் ரெ. சதீஸ் துவக்கி வைத்தார். 2025-26-ம் ஆண்டுக்கான அரவைப்பணி திங்களன்று துவங்கியது. இந்த ஆண்டுக்கான அர வைப் பருவத்தில், ஆலையில் மொத்தம் 7342.55 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2,35,000 மெட்ரிக் டன் கரும்பை அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்தார். இந்நிகழ்வில், பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி மற்றும் வே.சம்பத்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவ லர் ஆர்.பிரியா, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சரவணன், கரும்பு பதிவு செய் துள்ள ஆலை அங்கத்தினர்கள், பணி யாளர்கள், தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் இந் நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புக ளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, விழாவின் ஒரு பகுதியாக, சுப் பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கியது முதல் இதுநாள் வரை சிறப்பா கப் பணிபுரிந்த மூத்த கரும்பு அலுவலர் கோகிலாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது. இவரது சேவையை கௌரவிக்கும் வகையில், ஆலை சார்பாக மாவட்ட ஆட்சி யர் ரெ.சதீஸ் அவர்கள் பாராட்டுச் சான்றி தழை வழங்கினார். அவருக்கு ஆலைப்பணி யாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனை வரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p>
