தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரும்பு விவசாயிகளுக்கு சாதகமான ‘கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 2026’-ஐ வெளியிட வேண்டும்

22 May 2026, 9:24 pm
கரும்பு விவசாயிகளுக்கு சாதகமான  ‘கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 2026’-ஐ வெளியிட வேண்டும்

கரும்பு விவசாயிகளுக்கு சாதகமான ‘கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 2026’-ஐ வெளியிட வேண்டும்

புதுதில்லி, மே 22 - ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டு உள்ள “வரைவு கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 2026” என்பது கார்ப்பரேட் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாகவும், கரும்பு விவசாயிகளின் உண்மை யான கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் வகையி லும் உள்ளது என்று அகில இந்திய கரும்பு விவ சாயிகள் சம்மேளனம் (AISFF) குற்றம் சாட்டியுள்ளது. ஒ

ன்றிய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு விநியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம், அகில இந்திய விவசாயிகள் சங்கத் துடன் இணைக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் டி.

ரவீந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் புஷ்பேந்திர தியாகி ஆகியோர் இது தொடர்பான விரிவான கோரிக்க மனுவை அளித்துள்ளனர்.

கரும்பு விவசாயிகளை மைய மாகக் கொண்ட ஒரு சட்டமாக இதனை மாற்றிய மைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை, பிழிதிறன் வீதக் குறைப்பு கோரிக்கை ஒன்றிய அரசு கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை (FRP) நிர்ணயிப்பதற் கான சர்க்கரை பிழிதிறன் வீதத்தை (Recovery Rate) 10.25 சதவீதம் என தன்னிச்சையாக உயர்த்தி யுள்ளதை சம்மேளனம் வன்மையாகக் கண்டித் துள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் சராசரி பிழிதிறன் வீதம் குறைவாக இருக்கும் கள எதார்த்தத்தை இந்த முடிவு முற்றிலும் புறக்கணிக்கிறது. எ

னவே, கரும்புக்கான ஆதாய விலையை 9.5 சதவீத பிழிதிறன் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும், கரும்பு விவசாயிகளின் நீண்டகால வர்க்கக் கோரிக்கையான, உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபம் என்ற “சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை (C2+50%)” அடிப்படையில் கரும்பு விலையை இறுதி செய்ய வேண்டும் என்றும், சர்க்கரை ஆலையின் குறைந்தபட்ச விற்பனை விலையோடு கரும்பு விலையை முடிச்சுப் போடும் பிரிவை (Clause 3(d)) நீக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

துணை தயாரிப்பு லாபத்தில் விவசாயிகளுக்கு 50% பங்கு தற்போது நாடு முழுவதும் எத்தனால் கலப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு அளித்து வரும் நீண்டகால நோக்கிலான கொள்கை உந்துதல் கார ணமாக, சர்க்கரை ஆலைகளின் எத்தனால் உள்ளிட்ட துணை தயாரிப்புகளின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவ னங்கள் பெரும் லாபம் ஈட்ட இந்த வரைவு ஆணை வழிவகை செய்கிறது. ஆனால், இத்துறையின் முதன்மைப் பங்காளி களான கரும்பு விவசாயிகளும் தொழிலாளர் களும் இதிலிருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ள னர்.

எத்தனால் உற்பத்தி, மின்சார உற்பத்தி மற்றும் உரங்கள் விற்பனை போன்ற துணை தயாரிப்பு களின் மூலம் சர்க்கரை ஆலைகள் ஈட்டும் உபரி லாபத்தில் 50 சதவீதத்தை கரும்பு விவசாயிகளுக் கும் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற சட்டப்பூர்வ விதியை உருவாக்க வேண்டும் என சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

கூட்டுறவுத் துறையை நவீனமயமாக்கல், ஜனநாயகப்படுத்துதல் நாட்டில் உள்ள ஏழை மற்றும் சிறு கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்க ளின் நலன்களைப் பாதுகாக்கவும், கரும்பு விவ சாயத்தை நவீனமயமாக்கி உற்பத்தித் திறனைப் பெருக்கவும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங் களை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய கூட்டு றவு அமைப்புகள் அதிகாரத்துவக் கட்டுப்பாடின்றி, முழுமையான நிதி மற்றும் நிர்வாகத் தன்னாட்சி யுடன் செயல்பட ஒன்றிய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.

தற்போது கடுமையான நெருக்கடியில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை களை நவீன தொழில்நுட்பங்களுடன் தரம் உயர்த்த வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலை களின் வாரியங்கள் போன்ற சட்டப்பூர்வ அமைப்பு களுக்குத் தடையின்றி முறையான தேர்தல்களை நடத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

மேலும், எத்தனால் தயாரிப்பு அலகுகளைக் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் தொடங்க வேண்டும். கார்ப்பரேட் ஏகபோகத்திற்கு வழிவகுக்கும் ஆபத்து முந்தைய 1966 கரும்பு கட்டுப்பாட்டு ஆணை யில் இரு சர்க்கரை ஆலைகளுக்கு இடையிலான தூர வரம்பு 15 கிலோமீட்டராக இருந்தது. தற்போ தைய வரைவு ஆணையில் இந்த வரம்பை 25 கிலோமீட்டராக உயர்த்த முன்மொழியப்பட்டு உள்ளது.

இது சர்க்கரை ஆலைகளின் ஏகபோக ஆதிக்கத்தை அதிகரித்து, கரும்பு விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை முற்றிலும் அழித்துவிடும். அவர்கள் ஒரே ஒரு ஆலையை மட்டுமே நம்பி யிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படு வார்கள்.

எனவே, பழைய 15 கி.மீ தூர வரம்பையே தொடர வேண்டும். இதர முக்கியக் கோரிக்கைகள்: 14 நாள் பட்டுவாடா விதிமுறை: கரும்பு விநியோகம் செய்த 14 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும் என்ற விதி காகிதத்தில் மட்டுமே உள்ளது.

நிலுவைத் தொகையைத் தடுக்க வும், தாமதத்திற்கான வட்டியை முறையாக வழங்க வும் கடுமையான பொறுப்புக்கூறல் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.

கண்ட்சாரி (நாட்டுச்சர்க்கரை) ஆலைகள்: நாட்டின் 25 சதவீதத்திற்கும் அதிக மான கரும்பு கண்ட்சாரி ஆலைகளுக்குச் செல்வ தால், ஒன்றிய அரசின் நியாயமான ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஆலோசனை விலை ஆகிய விலைக் கட்டுப்பாடுகள் இந்த ஆலை களுக்கும் பொருந்தும் வகையில் சட்டம் இயற்றப் பட வேண்டும்.

வெட்டுக்கூலி மற்றும் போக்குவரத்து: கரும்பு வெட்டுவதற்கான கட்டணங்களையும், போக்குவரத்துச் செலவுகளையும் சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும். ஒன்றிய அரசு கரும் பின் கள விலையை (Field Price) நிர்ணயிக்க வேண்டும்.

இந்தியாவின் 57.35 லட்சம் ஹெக்டேர் கரும்பு சாகுபடி பரப்பையும், அதனை நம்பியுள்ள 55.70 லட்சம் பதிவு செய்யப்பட்ட கரும்பு விவசாயி களையும், 67.7 லட்சம் விவசாயத் தொழிலாளர் களையும் பாதுகாக்கும் வகையில் இந்த மாற்றங் களை வரைவு ஆணையில் மேற்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய கரும்பு விவசாயிகள் சம்மேள னம் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.