தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடர்ந்து அதிகரிக்கும் சர்க்கரை விலை: டீ, காபி விலை உயர்வு

2 Sept 2026, 10:53 pm
தொடர்ந்து அதிகரிக்கும் சர்க்கரை விலை: டீ, காபி விலை உயர்வு

தொடர்ந்து அதிகரிக்கும் சர்க்கரை விலை: டீ, காபி விலை உயர்வு

நாமக்கல், செப்.2-சர்க்கரை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் டீ, காபி மற்றும் பலகாரங்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், தொழிலாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஒன்றிய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார நடவடிக்கையால், இந்தியாவில் நாளுக்கு நாள் அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஈரான் - அமெரிக்கா போரை காரணம் காட்டி கணிசமான அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட வீட்டு பயன்பாடு பொருட்களின் விலை உயர்ந்தது. இதன் காரணமாக டீக்கடை, பேக்கரி ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து விதமான உணவு தயாரிப்பு கடைகளிலும் கணிசமான அளவில் உணவு பொருட்கள் மீது விலை உயர்வு ஏற்பட்டது. 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ, தற்போது 15 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி 20 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு பலகாரம் 8 ரூபாய்க்கும் என ஒவ்வொரு ஊரின் தன்மைக்கேற்ப பன் மடங்கு விலை உயர்ந்ததால் ஏழை,எளிய நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

தற்போது வரலாறு காணாத வகையில் சர்க்கரை விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், அதனையொட்டி அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவது பொதுமக்கள் தலையில்மீண்டும் இடியை இறக்கியது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசைத்தறி தொழிலாளிசந்திரன் என்பவர் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ சர்க்கரை 36 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 75 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் வீட்டு பயன்பாட்டிற்கே சர்க்கரை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நாங்கள் தினந்தோறும் சென்று வரும் டீக்கடைகளில் சாதாரணமாக ஒரு டீ 18 ரூபாய்க்கும், காபி 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும், பார்சல் வாங்கினால்30 ரூபாய்க்கு குறை

வாக இல்லை. ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் உள்ள தொழிலாளர்கள் மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றார்.

இதுகுறித்து டீக்கடை, பேக்கரி நடத்தும் உரிமையாளர்கள் கூறுகையில், அனைத்து விதமான மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, வேறு வழியின்றி மீண்டும் ஒருமுறை அனைத்து உணவுப்பொருட்களின் மீதும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாடிக்கையாளர்கள் இயல்புநிலை திரும்பும் வரையில் போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தங்களது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.