குடிநீர், தெருவிளக்கு வசதியின்றி அவதி: ஆட்சியரிடம் மனு
1 Dec 2025, 5:20 pm
<p><strong>குடிநீர், தெருவிளக்கு வசதியின்றி அவதி: ஆட்சியரிடம் மனு</strong></p>
<p>உதகை, டிச. 1- குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு நீலகிரி மாவட்டம் தும்மனாட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட கிராம மக்கள் திங்களன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தும்மனட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கெந்தோரை, ஆறுகுச்சி கிராமங்க ளில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் இல்லாமலும், தெருவிளக்கு வசதி இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறி, ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ஆழ்துளைக் கிணறு முறையாகப் புனரமைக்கப்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு மாதங்களுக் கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் அன்றாடத் தேவைக ளுக்காக பெரும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னரும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும், கிராமத்தில் தெருவிளக்குகள் முறையாக எரியாததால், இரவு நேரங்களில் வன விலங்குகளின் அச்சுறுத் தல் அதிகமாக உள்ளது. இதனால், முதியவர்கள், பெண்கள், மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட் டோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், உடனடி யாக தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர். கெந்தோரை, ஆறுகுச்சி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்டம், வடுகபட்டி பேரூ ராட்சிக்குட்பட்டது கஸ்தூரிபா கிராமத்தில், சுமார் 70 குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 50 பேருக்கு பட்டா உள்ளது. எஞ்சிய 20 குடும்பங்களுக்கு பட்டா இல்லை. சிமென்ட் அட்டை, ஓட்டு வீடுகளில் வசித்து வரும் மக்க ளுக்கு பட்டா வழங்க மறுக்கப்படுகிறது. பல்லாண்டுகளாக அங்கு வசித்து வந்தாலும் பூமி தான இயக்க, இடம் என அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பட்டா வழங்கிட வேண்டும் என மனு அளித் துள்ளனர்.</p>
