முந்தய பக்கம்

திருப்பூர் சாய ஆலைகளில் திடீர் கட்டண உயர்வு

10 Mar 2026, 3:51 pm
திருப்பூர் சாய ஆலைகளில் திடீர் கட்டண உயர்வு
<p><strong>திருப்பூர் சாய ஆலைகளில் திடீர் கட்டண உயர்வு</strong></p> <p>திருப்பூர், மார்ச் 10- அமெரிக்கா ஈரான் போர் காரணமாக &nbsp;மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக &nbsp;உயர்ந்துள்ளதால், சாய ஆலை உரிமை யாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத் தில் நிறங்கள் அடிப்படையில் கட்டண &nbsp;உயர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள் ளது. திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள &nbsp;சாய ஆலை உரிமையாளர்கள் சங்க &nbsp;அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலை வர் காந்திராஜன் தலைமை வகித்தார். இதில், அமெரிக்கா ஈரான் போர் காரண மாக மூலப்பொருட்கள் விலை அபரிமித மாக உயர்ந்துள்ளதால் தொழிலை &nbsp;நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. &nbsp;எனவே ரூ.10, ரூ.15, ரூ.20 என நிறங்கள் &nbsp;அடிப்படையில் கட்டண உயர்வு செய்ய &nbsp;முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்ன லாடை நிறுவனங்கள் இதற்கு உதவி செய்ய வேண்டும். இல்லை எனில் சாய &nbsp;ஆலை நிறுவனங்கள் மூடப்பட வேண் டிய நிலைக்கு தள்ளப்படும். சிலிண்டர் &nbsp;கிலோ ரூ.60 இல் இருந்து ரூ.104 ரூபா யாக உயர்ந்துள்ளது. பெராக்சைடு ரூ.26 ல் இருந்து ரூ.65 ரூபாயாக உயர்ந் துள்ளது. அசிட்டிக் ஆசிட் ரூ.46 ரூபாயில் &nbsp;இருந்து ரூ.100 ரூபாய் என மூலப்பொ ருட்கள் அனைத்தும் 20 சதவீதம் முதல் 2 &nbsp;மடங்கு வரை விலை உயர்ந்துள்ளது. எனவே சாயமிட கிலோவுக்கு ரூ.60க்கு &nbsp;பெறப்பட்ட லேசான நிற வகைக்கு ரூ.70 &nbsp;க்கும், ரூ.80க்கு பெறப்பட்ட இடை நிறத் திற்கு ரூ.95க்கும், 100 ரூபாய் பெறப்பட்ட &nbsp;அடர் நிறங்களுக்கு ரூ.120 என கட்டணம் &nbsp;உயர்த்தி நிர்ணயம் செய்வது என்பது &nbsp;உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கூட்டத்தில் செயலாளர் பொன் னுசாமி, பொருளாளர் மாதேஸ்வரன், துணைத்தலைவர்கள் பக்தவச்சலம், ஈஸ்வரன், இணைச்செயலாளர் செந் தில்குமார் உள்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram