முந்தய பக்கம்

பாலத்தில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு

1 Dec 2025, 5:20 pm
பாலத்தில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
<p><strong>பாலத்தில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு</strong></p> <p>விழுப்புரம், டிச.1- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே காரப்பட்டு-அரசூர் சாலையில் மலட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் தரைப்பாலம் திடீரென உள்வாங்கிப் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெஞ்சல் புயலால் பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஓராண்டாகியும் புதிய பாலம் கட்டப்படாததால், பொதுமக்கள் வசதிக்காக மிகவும் குறுகலான ஒரு தற்காலிகத் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. வடகிழக்குப் பருவமழைக் காரணமாக மலட்டாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்காலிகப் பாலத்தின் அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் அடைப்பு ஏற்பட்டதால், பாலம் உடையும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், ஞாயிறன்று &nbsp;பாலத்தின் மேல் உள்ள சாலையில் திடீரெனப் பெரிய பள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இதுபற்றித் தகவல் அறிந்த வட்டாட்சியர் ரகுராமன், காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்து ஆய்வு செய்தனர். உடனடியாக நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஜல்லிக் கற்களைக் கொட்டிப் பள்ளத்தைச் சீரமைத்தனர். அதன் பிறகு தற்காலிகத் தரைப்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. எனினும், பொதுமக்கள் அப்பகுதியில் நிரந்தரப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram