தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்ணுரிமை வரலாற்றில்  நாம் அறியாத நுட்பமான உண்மைகள்!

8 Mar 2026, 3:42 pm
பெண்ணுரிமை வரலாற்றில்  நாம் அறியாத நுட்பமான உண்மைகள்!

பெண்ணுரிமை வரலாற்றில்  நாம் அறியாத நுட்பமான உண்மைகள்!

•    புருத்தோனின் ஆணாதிக்கமும் மார்க்சின் பதிலடியும்: பெண்கள் அரசியலில் ஈடுபடு வதை பிரெஞ்சு தத்துவ அறிஞர் புருத்தோன் கேலி செய்தபோது, “குடும்பம் என்பது பெண்களுக்கான இயற்கையான அமைப்பு முறை அல்ல; பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு அதுவே ஆதாரமாக உள்ளது” என்று கூறி மார்க்ஸ் அதனை முறியடித்தார்.

•    ஜீன் டெரோயினின் அதிரடி பதில்: பிரெஞ்சு சட்டமன்றத்திற்குப் போட்டியிட்ட முதல் பெண் ஜீன் டெரோயின். “பெண் சட்டமன்ற உறுப்பினர் என்பது ஆண் செவிலித்தாய் போலவே அர்த்தமற்றது” என்று கேலி செய்த புருத்தோனிடம், “சட்டமன்ற உறுப்பினரின் பணிக்கு எந்த ஆண் உறுப்பு அவசியம்?” என்று கேட்டு அவரது வாயை அடைத்தார்.

•    பாரீஸ் வீதிகளில் ‘பெண் குரல்’: பெண்கள் மத்தியில் அரசியல் கருத்துக்களைக் கொண்டு செல்லும் நோக்கில் ‘பெண் குரல்’ (La Voix des Femmes) என்ற இதழைத் தயாரித்துத் தாமே  வீதிகளில் விற்றார் வீரமங்கை ஜீன் டெரோயின்.

• அகிலத்தில் ஒரு புரட்சி: 1864-ல் முதல் கம்யூனிஸ்ட் அகிலத்தில் பெண்களைச் சேர்ப்ப தற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்த போதும், மார்க்ஸ் அதனைத் துணிச்சலாக எதிர்த்துப்  பெண் செயல்பாட்டாளர்களை அகிலத்தில் இணைத்தார்.

•    மகளிர் தினத்தின் முதல் அலை (1911): முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டபோது, அரங்குகள் நிரம்பி வழியப் பெண்கள் திரண்டு வந்தனர். ஆண்கள் குழந்தைகளோடு வீட்டிலும், அரசியல் கூட்டங் பளில் பங்கேற்பதற்காகப் பெண்கள் வெளி யிலும் சென்ற ஒரு புதிய சமூக நிகழ்வு அன்று அரங்கேறியது. -  ச.லெனின்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.