திரைப்படங்களில் சப்டைட்டில், ஆடியோ விவரிப்பு கட்டாயம்
17 Mar 2026, 3:26 pm
<p><strong>திரைப்படங்களில் சப்டைட்டில், ஆடியோ விவரிப்பு கட்டாயம்</strong></p>
<p>மாற்றுத் திறனாளிகள் சங்க போராட்டத்திற்கு வெற்றி! சென்னை, மார்ச் 17 - திரைப்படங்களைக் காதுகேளாத மற்றும் பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், அனைத்துத் திரைப்படங்களிலும் சப்டைட்டில் மற்றும் ஆடியோ விவரிப்பு (Audio Description) வசதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறி விப்பைத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) உற்சாகமாக வரவேற்றுள்ளது. தடைகளற்ற பொழுதுபோக்கு: அரசாணை வெளியீடு இது தொடர்பாகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தணிக்கை வாரியத்திடம் சங்கம் முன்வைத்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. 2026 மார்ச் 15 முதல் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் மாற்றுத் திற னாளிகள் அணுகத்தக்க வகையில் (Accessible) இருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவு, 2016-ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் ஒரு ‘தடைகளற்ற இந்தி யாவை’ உருவாக்கும் முயற்சியின் முக்கியப் பகுதியாகும்” என்று தெரிவித்துள்ளனர். மேற்கத்திய நாடுகளுக்கு இணையான வசதி தேவை இந்த அறிவிப்புக்குப் பாராட்டுத் தெரி வித்த அதேவேளையில், அடுத்தகட்டமாக மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல், பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் ஆடியோ விவரிப்பையும் சப்- டைட்டிலையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்தியாவிலும் உருவாக்க வேண்டும் என்று சங்கம் வலி யுறுத்தியுள்ளது. பொழுதுபோக்கு என்பது அனை வருக்கும் பொதுவானது என்பதை உறுதிப் படுத்திய இந்த அறிவிப்பு, மாற்றுத் திறனாளி களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.</p>
