முந்தய பக்கம்

சென்னையில் தரமற்ற பொம்மைகள் பறிமுதல்

9 May 2026, 12:56 am
சென்னையில் தரமற்ற பொம்மைகள்  பறிமுதல்
<p><strong>சென்னையில் தரமற்ற பொம்மைகள் பறிமுதல் </strong></p><p>சென்னை,மே 8- சென்னையில் தர நிர்ணய முத்திரை இல்லாத பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமை வனத்தின் சென்னை கிளை அதிகாரி கள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட னர். கடந்த மே 6-ஆம் தேதி, சௌகார் பேட்டை நாராயண முதலித் தெருவில் உள்ள அம்பிகா ஸ்டோர்ஸ், மகாவீர் எண்டர்பிரைசஸ் மற்றும் ரத்தன் பஜார் பகுதியில் உள்ள சேத்ரபால் இம்பெக்ஸ் ஆகிய கடைகளில் அதிகாரி கள் சோதனை நடத்தினர். அப்போது, அரசு விதிகளின்படி கட்டாயமாக இருக்க வேண்டிய ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத ஏராளமான விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக் கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தரமற்ற விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தலாக அமையும் என்பதால், விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram