தரமில்லாத தார் சாலை ஒப்பந்ததாரரிடம் சரமாரியாக கேள்வி
4 Dec 2025, 3:52 pm
<p><strong>தரமில்லாத தார் சாலை ஒப்பந்ததாரரிடம் சரமாரியாக கேள்வி</strong></p>
<p>நாமக்கல், டிச.4- கொல்லிமலையில் புதிதாக போடப்பட்ட தரமில்லாத தார் சாலையை பெயர்த்து போட்டு ஒப்பந்ததாரரிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள அரியூர் நாடு ஊராட்சிக்குட்பட்ட குழிவளவு பகுதியிலிருந்து தேவக் காய்பட்டி வரை செல்லும் 2 கிலோ மீட்டருக்கு தார் சாலை அமைக்கும் பணி புதனன்று நடைபெற்றது. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலையின் மீது புதிய தாக தார் சாலை போட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் புதிய தாக போடப்பட்ட தார்சாலையின் நிலை குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் எங்கிருந்து எங்கு சாலை போடப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட தார் சாலை உறுதியாக உள்ளது. நீங்கள் போடும் புதிய தார்சாலை நிலையை பாருங்க என பேசி சாலையை பெயர்த்து போட்டு அங்கிருந்த ஒப்பந்தராரிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த காணொளி காட்சிகளின் அடிப்படையில் துறை சார் அதிகாரிகள் ஒப்பந்ததாரிடம் இது குறித்து விசாரணை யை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
