தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டன் கணக்கில் மானிய விலை யூரியா பதுக்கல்!

5 Jul 2026, 1:26 am
டன் கணக்கில் மானிய விலை யூரியா பதுக்கல்!

டன் கணக்கில் மானிய விலை யூரியா பதுக்கல்!

கோவை, ஜூலை 4- ஒன்றிய அரசின் மானிய விலை யில் வழங்கப்படும் யூரியா உரத்தை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து கேரளாவுக்கு அனுப்ப இருந்த திட்டம் விவசாயிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், திருமலை யாம்பாளையம் பேரூராட்சிக்குட் பட்ட தாமணம்பாறை கிராமத்தில், தனியார் விவசாய நிலத்தை குத் தகைக்கு எடுத்து கடந்த சில மாதங் களுக்கு முன்பு ஒரு குடோன் அமைக்கப்பட்டுள்ளது. ‘பிரதான் மந்திரி பாரதிய ஜன் உர்வராக பரி யோஜனா’ திட்டத்தின் கீழ் விவ சாயிகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய உரங்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து போலி இன்வாய்ஸ்கள் மூலம் இங்கு கடத்தி வரப்பட்டுள்ளன.

இங்குள்ள ரகசிய அறையில், 3000-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த யூரியாவை நிறமிகள் இல் லாத திரவ மற்றும் பேஸ்ட் வடிவ மாக மாற்றி, கேரளாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவிலிருந்து அடிக்கடி லாரிகள் வந்து சென்ற தால் சந்தேகமடைந்த விவசாயி கள், சனியன்று இரண்டு லாரி களை சிறைபிடித்த போது இந்த உர மோசடி வெளிச்சத்திற்கு வந் தது.

ஒன்றிய அரசின் யூரியா மூட்டைகள் வெளியே தெரிந் துவிடக் கூடாது என்பதற்காக, அவற்றை முற்றிலுமாக எரித்து சாட்சிகளை அழித்துள்ளனர். மேலும், இந்த குடோனுக்கு எவ் வித அனுமதியும் இன்றி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது எப் படி என்ற கேள்வியும் எழுந்துள் ளது. இதனிடையே, இப்பகுதியின் ரொட்டிகவுண்டனூர் கிடங்கிலும் மேலும் 500 யூரியா மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள் ளனர்.

இப்பகுதியில் தக்காளி, வெண்டை, தென்னை விவசாயமே பிரதானமாக உள்ள நிலையில், உரம் பதப்படுத்திய கழிவுநீரை திறந்தவெளியில் விடுவதால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தகவலறிந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார் லாரிகள் மற்றும் குடோனை கைப்பற்றினர். விவ சாயிகளுக்கு உரம் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவும் சூழலில், டன் கணக்கில் உரம் பதுக்கப்பட்ட சம் பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இக்கடத்தல் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமும், வேளாண்மைத் துறையும் விரி வான விசாரணை நடத்த போலீ சார் பரிந்துரைத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.